My Little Princess Book: ஆனந்த யாழை மீட்டுகிறாய்.. தந்தை மகளின் உறவை போற்றும் புத்தகம்: இத்தாலியில் வெளியீடு
சர்வதேச வழக்கறிஞர் எழுத்தாளர் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஐந்து சட்ட ஆலோசகர்களில் ஒருவருமான ஹரிஹர அருண் சோமசங்கர் புத்தக்கத்தை எழுதியுள்ளார்.
சர்வதேச வழக்கறிஞர் எழுத்தாளர் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஐந்து சட்ட ஆலோசகர்களில் ஒருவருமான ஹரிஹர அருண் சோமசங்கர் எழுதிய MY LITTLE PRINCESS புத்தகத்தை எழுதியுள்ளார்.
இத்தாலியின் ரோமில் உள்ள டெல்லா பென்டியென்சாவில் இத்தாலியின் உச்ச நீதிமன்ற நீதிபதியான மரியா டேனிலா போர்செலினோ மற்றும் இத்தாலிய ஒலிம்பிக் ஆணையத்தின் உறுப்பினர் எலெனா பான்டலியோ ஆகியோரால் உலகளாவிய அளவில் ஆங்கில மொழியில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.
தந்தை, மகளின் வாழ்க்கை பயணம் பற்றிய இந்த புத்தகம் வெளியானது முதல் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகளாவிய அளவில் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் இணையம் வழியாகவும் மற்றும் புத்தக சாலைகளிலும் கிடைக்கின்றன. இந்தப் புத்தகமானது காதல் ஒரு நொடியில் தொடங்கி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை இந்தப் புத்தகத்தின் விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும் MY LITTLE PRINCESS புத்தகமானது காதல், துன்பம், நிதி நெருக்கடிகள் என எல்லாவற்றிலும் நின்று போராடிய ராணா தனது தந்தையின் சபதத்தை நிறைவேற்றும் வாழ்க்கை பயணம் பற்றிய கதை.
வழக்கறிஞர் தொழிலில் வேறு எவராலும் எட்ட முடியாத உயரத்தை எட்டுவேன் என்று தந்தையிடம் உறுதியளித்ததால், வெளிநாடு செல்ல திட்டமிட்டு பல்வேறு சவால்களைச் சமாளித்து, லண்டனில் தனது வலுவான தளத்தை உருவாக்கினார். மேலும் அவர் தனது லட்சியத்தை நிறைவேற்றத் தவறாமல் உழைத்தார். ராணா மீது சாருவின் அக்கறையும், அனுதாபத்தையும் அவள் ராணாவிடம் தெரிவிக்க விரும்பவில்லை. அவனது சாதனைகளைக் கண்காணித்துக் கொண்டே இருந்தார்.
மறுபுறம், லண்டனைச் சேர்ந்த ரேச்சல், எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ராணாவிற்கு பக்கபலமாக இருந்தார். தனது தந்தைக்கு அளித்த வாக்குறுதிகளைக் கடைப்பிடித்து, நன்கு அறியப்பட்ட வழக்கறிஞராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைந்தாரா? தடைகளைத் தாண்டி ராணா தன் வாழ்வின் காதலை வென்றாரா? என்கிற பொருளோடு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நகரும் கதையாக இந்த புத்தகம் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்