Ahmedabad Plane Crash: 10 நிமிடம் தான்.. லண்டன் விமானத்தை தவறவிட்ட பெண்.. உயிர் தப்பியது எப்படி?
Ahmedabad Plane Crash: லண்டனில் வசிக்கும் சவுகான் விடுமுறைக்காக தனது குடும்பத்தினரை சந்திக்க இந்தியா வந்துள்ளார். விடுமுறை முடிந்து லண்டன் செல்ல தனியாக ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க இருந்துள்ளார்.

லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI171 இல் பயணிக்கவிருந்த பூமி சவுகான் என்ற பெண், 10 நிமிடங்களில் விமானத்தைத் தவறவிட்டு, மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
காப்பாற்றிய டிராபிக் ஜாம்:
அகமதாபாத்தில் இருந்து லண்டன் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணிக்கவிருந்த பூமி சவுகான் என்ற பெண் அகமதாபாத்தில் ஏற்ப்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி விமான நிலையத்தை அடைய தாமதம் ஆனது. இதன் காரணமாக அந்த பெண் 10 நிமிடத்தில் விமானத்தை அவர் தவறவிட்டார்.
என் உடல் நடுங்குகிறது:
இது குறித்து அந்த பெண் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அந்த பத்து நிமிடங்களால்தான், என்னால் விமானத்தில் ஏற முடியவில்லை. இதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை,""என் உடல் உண்மையில் நடுங்குகிறது. என்னால் பேச முடியவில்லை," என்று "நடந்த அனைத்தையும் கேட்ட பிறகும் என் மனம் இப்போது முற்றிலும் வெறுமையாக உள்ளது" என்றும் இதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை, என் கணபதி பாப்பா என்னைக் காப்பாற்றினார்," என்று அந்த பெண் கூறினார்.
விடுமுறைக்காக இந்தியா வந்துள்ளார்:
லண்டனில் வசிக்கும் சவுகான் விடுமுறைக்காக தனது குடும்பத்தினரை சந்திக்க இந்தியா வந்துள்ளார். விடுமுறை முடிந்து லண்டன் செல்ல தனியாக்ல ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க இருந்துள்ளார். ஆனால் போக்குவரத்து நெரிசலினால் ஏற்ப்பட்ட அந்த 10 நிமிடம் தாமதம் தாம் தனது உயிரை காப்பாற்றியதாக அந்த பெண் தெரிவித்தார்.
ஏர் இந்தியா விமான விபத்து:
அகமாதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட, ஏர் இந்தியாவின் AI171 விமானம், விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. விமானமானது அருகில் இந்த மாணவர் விடுதியில் மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணித்த ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க, மற்ற 241 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
The full sequence from take-off to crash—final moments of Air India 171 captured on CCTV. Clear catastrophic lack of lift just seconds after liftoff. pic.twitter.com/l6UAzZ3wtJ
— Shiv Aroor (@ShivAroor) June 12, 2025
உயிர் தப்பிய பயணி:
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக முதலில் தகவல்கள் வெளியானது, ஆனால் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
Amid all the horror of the Air India plane crash, this story of British national Vishwashkumar Ramesh from Leicester, who was in seat 11a, being the sole survivor and walking away with just a few scratches, is truly astonishing. pic.twitter.com/8py9Rssf0d
— Piers Morgan (@piersmorgan) June 12, 2025
விபத்தில் உயிர் தப்பிய அந்த நபரின் பெயர் விஸ்வாஷ் குமார் ரமேஷ். இவருக்கு வயது 40. இந்திய வம்சாவளியான இவர், இந்தியாவுக்கு பயணம் செய்துவிட்டு பிரிட்டனுக்கு திரும்பியுள்ளார். அப்போதுதான், விபத்தில் சிக்கியுள்ளார். சீட் நம்பர் 11Aவில் அமர்ந்திருந்த இவர், விபத்து நடப்பதற்கு ஒரு சில வினாடிக்கு முன்பு அவசர எக்ஸிட் வழியாக தப்பியதாகக் கூறப்படுகிறது.





















