(Source: ECI/ABP News/ABP Majha)
இருவரையும் காதலிக்கிறேன்... விட்டுப் பிரிய முடியாது... காத்து வாக்குல ரெண்டு திருமணம்
இரு பெண்களை ஒரே சமயத்தில் காதலிப்பது தவறு என உணர்ந்த ஹீரோ, இருவரையும் விட்டு பிரிந்து சென்று விடுவார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நிஜத்தில் அரங்கேறியுள்ளது.
தமிழில் சமீபத்தில் வெளியாக திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இதில், இரண்டு பெண்கள் ஹீரோவை காதலிப்பார்கள். அதேபோல, இருவரையும் ஹீரோ காதலிப்பார். ஒருவரை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருப்பார்.
இறுதியில், இரு பெண்களை ஒரே சமயத்தில் காதலிப்பது தவறு என உணர்ந்த ஹீரோ, இருவரையும் விட்டு பிரிந்து சென்று விடுவார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நிஜத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால், ஒரே ஒரு வித்தியாசம். இதில் இரண்டு பெண்களும் காதலித்த நபரை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் பண்டா கிராமத்தை சேர்ந்தவர் சந்திப். கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த குசும் லக்ரா என்பவரை சந்தீப் காதலித்துள்ளார். இருவரும் காதலித்ததால், லிவ்விங்கில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு மேற்குவங்கத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்ற போது சந்தீப் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
#KaathuVaakulaRenduKaadhal@VigneshShivN@NayantharaU@Samanthaprabhu2@VijaySethuOffl@Rowdy_Pictures
— Viswanathan Thanumoorthy (@viswa6691) June 20, 2022
'I love them both': Jharkhand groom marries 2 women in 1 ceremonyhttps://t.co/8imMPiMW8J
Source : "India Today" via Dailyhunt
அங்கு வேலைக்கு வந்த சுவாதி குமாரியை சந்தீப் காதலிலிக்க தொடங்கினார். அவரும் இவரை காதலித்துள்ளார். நாளடைவில் இவர்களது காதலை சந்தீப் மற்றும் குசும் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. தொடக்கத்தில், 2 பெண்களும் முதலில் எதிர்த்தாலும் பின்னர் சந்தீப் சமாதானம் செய்து வைத்தார். இதனால் அவர்களது குடும்பத்தினர் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒருவழியாக, 2 பெண்களையும் சந்தீப் திருமணம் செய்து கொள்ள முடிவானது. ஆனால் இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கிராமத்தையே எதிர்த்து சந்தீப் தனது காதலிகளான குசும் லக்ரா, சுவாதியை கரம் பிடித்தார். ஒரே சமயத்தில் இருவருக்கும் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சந்திப் கூறுகையில், “2 பெண்களை திருமணம் செய்து கொள்வதில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால் நான் இருவரையும் காலிக்கிறேன். இவர்களில் ஒரு வரை கூட விட்டு பிரிய முடியாது" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்