Video: காய்கறியை திருடிட்டாங்க.. மகளுடன் தாயின் முடியை இழுத்து ரோட்டில் போட்டு அடித்த கொடுமை!
மகளுடன் சேர்த்து தாயின் முடியை இழுத்து ரோட்டில் போட்டு அடித்த சம்பவம் மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. இருவரின் வயிற்றிலும் கம்பை வைத்து தாக்கியுள்ளனர். குஜராத்தில் காய்கறி சந்தையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று நடந்த இந்த சம்பவத்தின் காணொளி வைரலாகி வருகிறது.

காய்கறியை திருடியதாகக் கூறி, மகளுடன் சேர்த்து தாயின் முடியை இழுத்து ரோட்டில் போட்டு அடித்த சம்பவம் மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. இருவரின் வயிற்றிலும் கம்பை வைத்து தாக்கியுள்ளனர். குஜராத்தில் காய்கறி சந்தையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று நடந்த இந்த சம்பவத்தின் காணொளி வைரலாகி வருகிறது.
பெண்கள் மீது கொடூர தாக்குதல்:
குஜராத் மாநிலம் சூரத்தில் காய்கறியை திருடியதாகக் கூறி, பெண் ஒருவரையும் அவரது மகளையும் மோசமாகி தாக்கியுள்ளனர். அவர்களின் முடியை பிடித்து இழுத்து ரோட்டில் தள்ளி அடித்துள்ளனர். அதோடு நிற்காமல், கம்பை கொண்டு இருவரின் வயிற்றிலும் தாக்கியுள்ளனர். பெண்கள் இருவரையும் கடைக்காரர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், இரண்டு ஆண்கள் சேர்ந்து அந்தப் பெண்ணையும் அவரது மகளையும் அடிப்பதைக் காண முடிகிறது. அந்த வழியாக செல்பவர்கள், எதையும் கேட்காமல் அமைதியாக கடந்து செல்கின்றனர். நெற்றியில் இருந்து ரத்தம் வழியும் நிலையில், கையில் ஒரு கம்பை பிடித்துக் கொண்டு, வாட்ச்மேன் போல் தோன்றும் ஒரு ஆண், அந்தப் பெண்ணை நோக்கி நடந்து சென்று, அவரது தலைமுடியைப் பிடித்து சாலையில் தள்ளி அடிக்கிறார்.
வைரலாகும் வீடியோ:
அதே நேரத்தில், இரண்டு ஆண்கள் ஒரு இளம் பெண்ணைத் தாக்குவதைக் காண முடிகிறது. அவர்கள் அவருடைய தலைமுடியைப் பிடித்து இழுத்து, தரையில் தள்ளி, வயிற்றில் உதைக்கின்றனர். இந்தச் சம்பவம் பொதுமக்கள் முன் நடந்த போதிலும், யாரும் அந்த இரண்டு பெண்களுக்கும் உதவ முன் வரவில்லை. இதையடுத்து, பெண்களை தாக்கிய இருவரை காவல்துறை கைது செய்தது.
સુરત APMCમાં શાકભાજી ચોરીના આક્ષેપ બાદ મહિલા અને એક યુવતી પર કરાયેલ હુમલાની ઘટનામાં સુરત શહેર પુણા પોલીસે બે આરોપીને ઝડપી કરાવ્યું કાયદાનું ભાન.#સુરત_શહેર_પોલીસ_તમારી_સાથે_તમારા_માટે
— Surat City Police (@CP_SuratCity) April 10, 2025
.
.#surat #suratcitypolice #suratpolice #suratcitypunapolice #puna #punapolice pic.twitter.com/PhFViMPV68
எக்ஸ் தளத்தில் இதுகுறித்து சூரத் போலீஸ் வெளியிட்ட பதிவில், "சூரத் ஏபிஎம்சி பகுதியில் காய்கறிகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஒரு பெண் மற்றும் சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், சூரத் நகரகாவல்துறை இரண்டு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தியுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

