Viral Video: போலீஸை முட்டித்தூக்கிய காளை - அதிர்ச்சி வீடியோ...!
இந்த சம்பவம் புது டெல்லியின் தயால்பூர் பகுதியில் நடந்துள்ளது. அங்கு கான்ஸ்டபிள் கியான் சிங் ஷெர்பூர் சௌக்கில் பணியில் இருந்தார்
சாலையில் இருந்த காவலரை காளை ஒன்று தூக்கி வீசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில், ஒரு காளை பணியில் இருக்கும் காவலரை நோக்கி வருவதைக் காணலாம். அந்த காளை காவலரை நெருங்க நெருங்க, அதிர்ச்சியூட்டும் வகையில் அவரை மூட்டி கீழே தள்ளியது. அவர் சாலையில் செல்போனில் படம்பிடித்துக்கொண்டிருந்தபோது முட்டியதாக தெரிகிறது. இந்தக் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த சம்பவம் புது டெல்லியின் தயால்பூர் பகுதியில் நடந்துள்ளது. அங்கு கான்ஸ்டபிள் கியான் சிங் ஷெர்பூர் சௌக்கில் பணியில் இருந்தார். காளை சிங்கைத் தாக்கிய உடனேயே, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டத் தொடர்ந்து,அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ:
A Delhi cop was attacked by a bull on Thursday evening in the city's Dayalpur area. The constable is fine now and has been discharged from the hospital pic.twitter.com/T0SnnE7sJu
— Abhimanyu Kulkarni (@SansaniPatrakar) April 2, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்