மேலும் அறிய

அண்ணாமலை - நயினார் நாகேந்திரனுக்கு உட்கட்சி பனிப்போர், இதான் காரணம் - செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் நயினார் நாகேந்திரன் கூட்டணி குறித்து பேச தயாராக இல்லை. இதனால் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும் , இந்நாள் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் உட்கட்சி பனிப்போர் தொடங்கியிருக்கிறது.

தமிழகத்தில் நயினார் நாகேந்திரன் கூட்டணி குறித்து பேச தயாராக இல்லை. இதனால் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும் , இந்நாள் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் உட்கட்சி பனிப்போர் தொடங்கியிருக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

அவர் அது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கூட்டணியில் விரிசல்;

தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நிர்ப்பந்தத்தால் ஏற்பட்டதன் விளைவாக கடும் கருத்து வேறுபாடுகள் இரு கட்சிகளிடையே சமீபகாலமாக எழுந்து வருகின்றன. அ.தி.மு.க.வை பா.ஜ.க. கூட்டணியில் சேர்ப்பதற்காக உள்துறை அமைச்சர் என்ற முறையில் வருமான வரித்துறை , அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணிக்கான அறிவிப்பு அமித்ஷாவால் வெளியிடப்பட்டது.

இபிஎஸ் - கூட்டணி பற்றி பேச வாய்ப்பு அளிக்கவில்லை

இயல்பாக அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் கூட்டணி குறித்த அறிவிப்பை அ.தி.மு.க. தலைமை தான் வெளியிடுவது வழக்கம். ஆனால் , அதற்கு மாறாக அமித்ஷா இருக்கும் இடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டு அங்கே கூட்டணி அறிவிப்பு வெளியான போது , பேசுவதற்கு கூட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதன் மூலம் தொடக்கத்தில் இருந்தே பூசல்கள் நீறு பூத்த நெருப்பாக இருந்து வருகின்றன. அதன் விளைவாக இன்றைக்கு கூட்டணியில் விரிசல் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.

அண்ணாமலை கருத்து - புதிய குழப்பம்

பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ததைப் போல எவரும் செய்திருக்க முடியாது. ஆனால், அ.தி.மு.க. இல்லாமல் பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்ற காரணத்தால் பா.ஜ.க. தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை அகற்றி விட்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒத்து போகின்ற வகையில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். நேற்று அண்ணாமலை நிருபர்களிடம் பேசுகிற போது , ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ‘தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று பலமுறை கூறி விட்டார். அதற்கு பிறகு மாற்று கருத்து கூற எவருக்கும் உரிமையில்லை” எனக் கூறியது புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்ணாமலை - நயினார் நாகேந்திரனுக்கும் உட்கட்சி பனிப்போர்

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், ‘நமது நோக்கம் 2026 சட்டமன்றத் தேர்தல் அல்ல, நமது இலக்கு 2029 மக்களவைத் தேர்தல் தான். தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் நமது எண்ணிக்கையை பெருக்குவது மட்டுமே நமது நோக்கம்” என்று கூட்டணி ஆட்சி குறித்து பேசுவதை தவிர்த்திருக்கிறார். தொடக்கத்திலிருந்தே கூட்டணி ஆட்சி என்பதில் அமித்ஷா, அண்ணாமலை போன்றோர் உறுதியாக இருந்தாலும், தமிழகத்தில் நயினார் நாகேந்திரன் கூட்டணி குறித்து பேச தயாராக இல்லை. இதன் மூலம் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும், இந்நாள் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் உட்கட்சி பனிப்போர் தொடங்கியிருக்கிறது. 

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அறிவிப்பு வெளி வந்ததுமே அ.தி.மு.க.வை பா.ஜ.க. விழுங்கி விடும் என்று எச்சரித்தோம். மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போட்டி சிவசேனா கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதே போல , சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து போட்டி தேசியவாத காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரையும் வழிக்கு கொண்டு வர அமலாக்கத்துறை பயன்படுத்தப்பட்டு , பா.ஜ.க. கூட்டணியில் சேர்க்கப்பட்டார்கள்.

அ.தி.மு.க.வை அமித்ஷா கபளீகரம் செய்யப் போவது உறுதி

பகீரத முயற்சிகள் மேற்கொண்டு ஒடிசாவில் ஆட்சியில் இருந்து நவீன் பட்நாயக் ஆட்சி அகற்றப்பட்டது. இதே போல அச்சுறுத்தலுடன் தான் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் பா.ஜ.க. கூட்டணியில் சேர்க்கப்பட்டார். 

பா.ஜ.க.விற்கு பலம் இல்லாவிட்டாலும், இத்தகைய குறுக்கு வழிகளை கையாண்டு ஆட்சியை கைப்பற்றுவது கைவந்த கலையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அமித்ஷா இதே உத்தியை கையாண்டு அ.தி.மு.க.வை நிர்ப்பந்தப்படுத்தி பா.ஜ.க. கூட்டணியில் சேர வைத்திருக்கிறார். கூட்டணியில் சேர்ந்த பிறகு பலமுறை தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் ஏற்படும் என்று அமித்ஷா தொடர்ந்து பேசி வருகிறார். அதைத் தான் அண்ணாமலை வலியுறுத்திக் கூறுகிறார். காலப்போக்கில் அ.தி.மு.க.வை அமித்ஷா கபளீகரம் செய்யப் போவது உறுதியாகும். 

இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அதை ஏற்றுக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி தயாராக இல்லை. அதே போல, பாட்டாளி மக்கள் கட்சி தந்தை , மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக பிளவுபட்டு கிடப்பதால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி என்பது தொடக்கத்திலிருந்தே பொருந்தாத , யாரும் சேர முன்வராத ஒரு தோல்வி கூட்டணியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், பா.ஜ.க.வை கழற்றி விட்டு, தமிழக வெற்றி கழகத்துடன் சேரலாமா என்ற முயற்சியிலும் அ.தி.மு.க. ஈடுபடுகிறது. இத்தகைய குழப்பங்களுக்கிடையே தனது சுற்றுப் பயணத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவதை மக்கள் எள்ளி நகையாடி வருகிறார்கள்.

எனவே , தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கூட்டணியில் கருத்து வேறுபாடுகளோ, மோதல்களோ இல்லாமல் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. மக்கள் விரோத கூட்டணியை தோற்கடிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இதில் குழப்பம் விளைவிக்க எவர் முயற்சி செய்தாலும் அந்த முயற்சிகள் பகல் கனவாகத் தான் முடியும். எங்கள் கூட்டணி கொள்கைக் கூட்டணி. ஆனால், அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி நிர்ப்பந்தத்தால் அமைந்த சந்தர்ப்பவாத கூட்டணி. அந்தக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாமல் படுதோல்வியடையச் செய்வார்கள் என செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget