Shelf life of Covaxin: காலாவதியான கோவாக்சின் தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டதா? மத்திய அரசு கூறுவது என்ன?
தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அளித்த புள்ளிவிவரங்களை முறையாக ஆய்வு செய்து, விரிவான பகுப்பாய்வுகளுக்கு பிறகே இந்த தடுப்பூசிகளின் ஆயுட்காலம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பால் நீட்டிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்;
பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியின் ஆயுட்காலத்தை (shelf life) 9 மாதங்களில் இருந்து, 12 மாதங்களாக நீட்டித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, 25 அக்டோபர் 2021 அன்று உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று, கோவிஷீல்டு தடுப்பூசியின் ஆயுட்காலத்தையும் 6 மாதத்திலிருந்து 9 மாதங்களாக நீட்டித்து 22 பிப்ரவரி 2021 அன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Shelf-Life Extension of COVAXIN®#covaxin #COVID19 #covid #BharatBiotech #pandemic #environment #environmentallyfriendly #ecofriendly #immunization #savetheplanet pic.twitter.com/fgUN8KfwzR
— BharatBiotech (@BharatBiotech) December 20, 2021
தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அளித்த புள்ளிவிவரங்களை முறையாக ஆய்வு செய்து, விரிவான பகுப்பாய்வுகளுக்கு பிறகே இந்த தடுப்பூசிகளின் ஆயுட்காலம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பால் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
ஆயுட்காலம் என்றால் என்ன?
கோவிஷீல்டு உட்பட காலாவதி தேதியை கடந்த எந்த தடுப்பூசியும் போடக்கூடாது. எந்தவொரு நோய்த்தடுப்புத் திட்டத்தின் பின்னணியிலும் தடுப்பூசிகளை நிராகரிப்பது மிகவும் வருத்தமளிக்கும் அதே வேளையில், இந்த காலாவதியான அளவுகளை விநியோகச் சங்கிலியிலிருந்து அகற்றி பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்று WHO பரிந்துரைக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, கொடுக்கப்பட்ட சேமிப்பு வெப்பநிலையில் (Given storage temperature) தடுப்பூசி தனது முழுமையான ஆற்றலையும் நிலைத்தன்மையையும் எவ்வளவு எத்தனை காலம் தக்க வைத்துக் கொள்ளும் என்பதன் அடிப்படையில் தடுப்பூசியின் ஆயுட் காலம் தீர்மானிக்கப்படுகிறது. ஆயுட் காலத்தின் அடிப்படையில் தடுப்பூசியின் காலாவதி நாள் நிர்ணயிக்கப்படுகிறது.
Well done Young India! ✌🏼
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 3, 2022
Over 40 Lakhs between 15-18 age group received their first dose of #COVID19 vaccine on the 1st day of vaccination drive for children, till 8 PM.
This is another feather in the cap of India’s vaccination drive 💉#SabkoVaccineMuftVaccine pic.twitter.com/eieDScNpR4
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்