Sonia Gandhi: சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: எங்கு தெரியுமா?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார்
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார். அவருடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் செல்கின்றனர்.
வெளிநாடு பயணம்:
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளதாவது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாகவும், வெளிநாட்டில் சிகிச்சை முடித்துவிட்டு, இத்தாலியில் உள்ள தனது தாயாரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் சோனியா காந்தி எந்த நாட்டிற்கு சிகிச்சைக்காக செல்லவுள்ளார் என உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
Congress President Sonia Gandhi, along with Rahul Gandhi & Priyanka Gandhi Vadra, will be traveling abroad for medical check-ups. Party MP Rahul Gandhi will address 'Mehangai Par Halla Bol' rally in Delhi on Sept 4: Jairam Ramesh, Congress General Secy in-charge (Communications) pic.twitter.com/ROiwFQYjv4
— ANI (@ANI) August 23, 2022
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 3 முறை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டார். டெல்லியில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடல்நலம் பாதிப்பு காரணமாக பொதுமக்களை சந்திப்பதையும் சோனியா காந்தி குறைத்து கொண்டார். இதையடுத்து உடல்நலத்தில் கவனம் செலுத்தும் வகையில், சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு சோனியா காந்தி செல்கிறார்.
Congress says party president Sonia Gandhi will travel abroad for medical check-ups, and Rahul Gandhi and Priyanka Gandhi Vadra will accompany her
— Press Trust of India (@PTI_News) August 23, 2022
காங்கிரஸ் பொதுக்கூட்டம்:
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து, ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, காங்கிரசின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், அடுத்த மாதம் 4-ஆம் தேதி காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ராகுல் காந்தியே, தலைவராக பொறுப்பேற்க வேண்டும் எனவும், ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பாரா என சந்தேகம் எழும்பியுள்ளது.
Nobody knows what will be decided: Rajasthan CM Gehlot on Congress president speculation
— Press Trust of India (@PTI_News) August 24, 2022