![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Weather Update: ஒரே நேரத்தில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. புயலாக மாறுமா? வானிலை சொல்லும் தகவல் என்ன?
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![TN Weather Update: ஒரே நேரத்தில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. புயலாக மாறுமா? வானிலை சொல்லும் தகவல் என்ன? A low pressure area has formed over the Bay of Bengal and the Arabian Sea the Meteorological Department said TN Weather Update: ஒரே நேரத்தில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. புயலாக மாறுமா? வானிலை சொல்லும் தகவல் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/29/6414aaabc3b6bbb4741ff54da01963d11695965307130589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வட கடலோர கர்நாடகா மற்றும் அண்டை பகுதிகளில் சூறாவளி சுழற்சியின் காரணமாக, தெற்கு கொங்கன்-கோவா கடற்கரை ஒட்டி கிழக்கு மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்புடைய சூறாவளி சுழற்சி சராசரி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிமீ வரை உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மியான்மர் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புயல் சுழற்சியின் தாக்கத்தின் கீழ், வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 7.6 கிமீ வரை உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கம் நோக்கி நகரும் என வானிலை மையம் கணித்துள்ளது.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்நிலை இந்த இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள்து.
இதன் காரணமாக மீனவர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதிகள்:
29.09.2023 மற்றும் 30.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய-வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
01.10.2023 மற்றும் 02.10.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
29.09.2023 மற்றும் 30.09.2023: கர்நாடக – கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)