மேலும் அறிய

9 AM Headlines: காலை 9 மணி தலைப்புச் செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நிகழ்ந்தது என்னென்ன..?

9 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் - தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலர் செல்வ விநாயகம் மத்திய அரசுக்கு கடிதம்.
  • இயேசு கிருஸ்து ஒரு மதத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே உரித்தானவர் என ஆளுநர் ரவி பேச்சு.
  • மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஓட்டம், மொழி அழிந்தால் இனமும் அழிந்து போகும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசியுள்ளார். 
  • அதிமுக முன்னாள் எம்.பி மஸ்தான் தஸ்தகீர் காலமானார். 
  • திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு அரசியல் புரட்சியை செய்யவுள்ளோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். 
  • 2023ஆம் ஆண்டு மார்ச்/ ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்குத் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
  • வரும் 25ஆம் தேதி தென் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
  • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
  • "ஓபிஎஸ் தலைமையிலான கூட்டத்தை கட்சி கூட்டமாக பார்க்க முடியாது" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
  • தெற்கு ரயில்வேயின் 964 பணிகளில் 80 சதவீத வட இந்தியர்களுக்குத் தாரை வார்ப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, 100% மாநில ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
  • தமிழகத்தில் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் லாபகரமாக இயங்கி வருவதாக, அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
  • வங்கக்கடலில் அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல். 

இந்தியா:

  • சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, கன்னியாகுமரி, மதுரை ரயில் நிலையங்களை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் தகவல். 
  • இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கொரோனா விதிமுறைகளை பயன்படுத்த மத்திய சுகாதாரதுறை அமைச்சர் காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், பிரதமர் மோடி குஜராத் தேர்தலில் விதிமுறைகளை பின்பற்றினாரா என பதில் கேள்வி. 
  • சீனாவை அச்சுறுத்தி வரும் உருமாறிய கொரோனா வகையான ஒமிக்ரான் BF.7 பாதிப்பு இந்தியாவில் மூன்று பேருக்கு  கண்டறியப்பட்டுள்ளது. விமானநிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை தொடக்கம்.
  • 2018 முதல் 2021-ம் ஆண்டு வரை 4,798 மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
  • தமிழ்நாட்டில் 42% சதவீத கடல் அரிப்புக்குள்ளாகி நீர்மட்டம் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தகவல். 
  • கத்தார் உலகக்கோப்பை கால்பந்து இறுதிபோட்டி அன்று கேரளாவில் 50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • நாட்டில் 60 நாட்களில் 1.6 லட்சம் கிலோ சட்டவிரோத போதை பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
  • படுக்கை வசதியுடன் கூடிய 200 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஒடிசாவில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

உலகம்:

  • ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட வேகா-சி ராக்கெட் தோல்வியடைந்ததாக ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது
  • ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • முட்டாள்தனமான நபர்கள் கிடைத்தால் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.22 கோடியாக உயர்வு
  • ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள இடைக்கால தடைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு:

  • வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 
  • வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்து நவ்தீப் சைனி விலகல்.
  • ஒரு வீரர் நாட்டுக்காக விளையாடும்போது அழுத்ததை உணர்ந்தால், நீங்கள் விளையாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று கபில்தேவ் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
  • சர்வதேச பெண்கள் டி20 தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்ட பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3வது இடத்தில் உள்ளார். 
  • ரிக்கி பாண்டிங்கை விட தோனியே மிகச் சிறந்த கேப்டன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget