மேலும் அறிய

Birds Saviour: காயம்பட்ட பறவைகளை காப்பாற்றி வரும் நிஜ 2.O பறவை மனிதர்!

தனது சொந்த சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை பறவைகளின் உணவிற்காக செலவழித்தவர். இரவில் உணவுண்ணும் ஆந்தைகளுக்கு இரவில் விழித்திருந்து உணவுகளும், பகலில் உணவுண்ணும் பறவைகளுக்கு பகலிலும் உணவு கொடுத்தும் காப்பாற்றி மருத்துவம் பார்த்துள்ளார்.

2.0 திரைப்படத்தில் நடிகர் அக்சய்குமார் பறவைகளை காப்பாற்ற போராடும் பறவை மனிதராக நடித்திருப்பதைப் பார்த்திருப்போம். நிஜ வாழ்க்கையில் காயம்பட்ட பறவைகளை காப்பாற்றப் போராடும் ஒரு உண்மையான பறவை மனிதரைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

Birds Saviour: காயம்பட்ட பறவைகளை காப்பாற்றி வரும் நிஜ 2.O பறவை மனிதர்!

சூழலியல் செயற்பாட்டாளர் ராமமூர்த்தி தனது முகநூலில் நிஜ பறவை மனிதர் என கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை பற்றி எழுதியிருந்தார். அதில் ”சுப்பிரமணியன் 30 ஆண்டுகளாக அடிபட்ட கொன்றுண்ணி பறவைகளான கழுகு, வல்லூறு, ஆந்தை போன்றவற்றை எடுத்து வந்து சொந்த வீட்டில் வைத்து, தனது சொந்த சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை பறவைகளின் உணவிற்காக செலவழித்தவர். இரவில் உணவுண்ணும் ஆந்தைகளுக்கு இரவில் விழித்திருந்து உணவுகளும், பகலில் உணவுண்ணும் பறவைகளுக்கு பகலிலும் உணவு கொடுத்தும் காப்பாற்றி மருத்துவம் பார்த்துள்ளார். பின்னர் பறவைகளுக்குப் பயிற்சியும், பராமரிப்பும் கொடுத்து முறையான பறக்கும் நிலைக்கு வந்தவுடன் சுதந்திரமாக பறக்க விடும் பணியை சிறப்பாக செய்து வந்த இவரைப் பறவை மனிதர் எனலாம். இந்தப் பறவைகள் இருக்கும் வரை இவரது வீட்டிற்கு எந்த உறவினர்களும் வரமாட்டார்கள். கொன்றுண்ணி பறவைகளிடம் இயல்பாக வீசும் துர்வாடையே காரணம்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

Birds Saviour: காயம்பட்ட பறவைகளை காப்பாற்றி வரும் நிஜ 2.O பறவை மனிதர்!

ஆச்சரியம் தரும் இத்தகவல்கள் தந்த ஆர்வத்தினால் ஏபிபி நாடு செய்திகளுக்காக சுப்பிரமணியத்தை தொடர்புக் கொண்டு பேசினோம். கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணியனுக்கு வயது 68. டென்னிஸ், காராத்தே பயிற்சியாளர்,வன உயிரின புகைப்பட கலைஞர், கானுயிர் ஆர்வலர் என பன்முகத் தன்மை கொண்டவர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

Birds Saviour: காயம்பட்ட பறவைகளை காப்பாற்றி வரும் நிஜ 2.O பறவை மனிதர்!

தொடர்ந்து பேசிய அவர், “எந்த நாட்டிற்கு சென்றாலும் முதலில் கோவிலுக்கு செல்வேன். அடுத்தது உயிரியல் பூங்காக்களுக்கு பறவைகளை பார்க்க சென்றுவிடுவேன். நான் சிறுவனாக இருந்த போது எனது அம்மா எனக்கு வளர்ப்பதற்காக மைனா வாங்கிக் கொடுத்தார்கள். அப்போது முதல் பறவைகளின் மீது அதிக ஆர்வம் இருந்து வருகிறது.

Birds Saviour: காயம்பட்ட பறவைகளை காப்பாற்றி வரும் நிஜ 2.O பறவை மனிதர்!

30 ஆண்டுகளுக்கு முன்பு சந்தைகளிலும், சாலைகளிலும் கிளி உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கிளி பிடிப்பவர்கள் விரித்த வலைகளில் கழுகு உள்ளிட்ட பறவைகளும் அவ்வப்போது சிக்கிக் கொள்ளும். அப்படி பிடிக்கப்பட்ட பறவைகளை விடுவிடுக்க வேண்டுமென அவர்களிடம் சொல்வேன். சிலர் விடுவிடுத்து விடுவர். சில நேரங்களில் காசு கொடுத்து வாங்கியும் பறக்க விட்டுள்ளேன். நல்ல நிலையில் உள்ள பறவைகளை உடனடியாக பறக்க விட்டு விடுவேன். உடல் நிலை மோசமாக உள்ள பறவைகளுக்கு சிகிச்சை அளித்து நல்ல நிலையை அடைந்ததும் பறக்க விடுவேன். அக்காலங்களில் இதுபோன்ற பணிகளை யாரும் செய்ய மாட்டார்கள்.

Birds Saviour: காயம்பட்ட பறவைகளை காப்பாற்றி வரும் நிஜ 2.O பறவை மனிதர்!

வனத்துறையினரிடம் அனுமதி பெற்று பறவைகளுக்கு சிகிச்சை அளிக்க துவங்கினேன். பறவைகளுக்கு சிகிச்சையளிக்கவும், பயிற்சியளிக்கவும் இரண்டு கால்நடை மருத்துவர்கள் கற்றுத்தந்தனர். அதேபோல வெளிநாட்டில் இருந்து வாங்கி வரப்பட்ட புத்தகங்களும் உதவிகரமாக இருந்தன. பறவைகளுக்கு இரை தேடும் திறன் மிகவும் முக்கியம். அப்பயிற்சி அளிக்காமல் பறவைகளை பறக்கவிட்டால், அவை இறக்க நேரிடும். பறவைகளை கூண்டில் வைத்திருந்தாலும் அதன் இரை தேடும் திறன் போய்விடும். கழுகு, ஆந்தை உள்ளிட்ட பறவைகள் பறக்க வைக்கவும், பயிற்சி அளிக்கவும் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். 30 க்கும் மேற்பட்ட கொன்றுண்ணி பறவைகளுக்கு சிகிச்சை அளித்து, பயிற்சி அளித்து பறக்க விட்டுள்ளேன்.

Birds Saviour: காயம்பட்ட பறவைகளை காப்பாற்றி வரும் நிஜ 2.O பறவை மனிதர்!

எனது நண்பர்களும், அக்கம் பக்கத்து வீட்டினரும் காயம்பட்ட பறவைகளை என்னிடம் கொண்டு வந்து தருவது வழக்கம். அந்த வகையில் மரங்களை வெட்டுவதால் கீழே விழுந்து அடிபடும் ஆந்தைகளும், உண்டி வில் உள்ளிட்டவற்றால் தாக்கப்பட்ட பறவைகளும் அதிகமாக வந்துள்ளது. பறவைகளை கவனத்துடனும், எச்சரிக்கை உடனும் கையாள வேண்டும். ஆந்தை இரவு நேரத்தில் தான் விழித்திருக்கும். அதற்கு உணவளிக்க வேண்டி இரவு நேரங்களில் விழித்திருந்து உணவளித்துள்ளேன். எனக்கு நிரந்தர வருமானம் என எதுவும் இல்லை. கொன்றுண்ணி பறவைகள் இறைச்சி தான் சாப்பிடும் என்பதால், அப்பறவைகளின் இறைச்சி உணவிற்காக அதிக செலவு செய்துள்ளேன். இயல்பாகவே அப்பறவைகளிடம் தூர்வாடை வீசும். அப்பறவைகள் இருந்த போது உறவினர்கள் யாரும் வீட்டிற்கு வரமாட்டார்கள். பறவைகளோடு இருப்பது என்பது மன நிம்மதியை தரக்கூடியது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டில் முடங்கியுள்ள சூழலில், வீட்டில் உள்ள பறவைகளை கவனித்துக் கொள்வதால் தான் நேரம் செல்கிறது.

Birds Saviour: காயம்பட்ட பறவைகளை காப்பாற்றி வரும் நிஜ 2.O பறவை மனிதர்!

குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பறவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பறவைகள் குறித்து கற்றுத்தரவும் வேண்டும். இதற்கு பறவை பூங்காக்கள், வண்ணத்துப்பூச்சி பூங்காக்கள் உருவாக்கப்பட வேண்டும். அழிந்து வரும் பறவைகளை காப்பாற்ற அதிக செலவானாலும் ஒரிடத்தில் வளர்த்து பறக்க விடுவது தான் ஒரே வழி.

Birds Saviour: காயம்பட்ட பறவைகளை காப்பாற்றி வரும் நிஜ 2.O பறவை மனிதர்!

பறவைகளுக்கு சுதந்திரம் அளிக்கிறோம் என ஆப்ரிக்கன் லவ் பேர்ட்ஸ், கிரே பேரட் போன்ற கூண்டில் வளர்க்கப்படும் பறவைகளை கடைகளில் வாங்கி சிலர் பறக்க விடுகின்றனர். அப்பறவைகளை கூண்டில் இருந்து விடுவிடுப்பது அதனை கொல்வதற்கு சமம். ஏனெனில் தலைமுறை தலைமுறையாக கூண்டில் வளரும் பறவைகளுக்கு உணவு எங்கிருக்கும் என்றே தெரியாது. இதுபோன்ற தவறை செய்யக் கூடாது.

Birds Saviour: காயம்பட்ட பறவைகளை காப்பாற்றி வரும் நிஜ 2.O பறவை மனிதர்!

இப்போது கொன்றுண்ணி பறவைகள் அடிபடுவது குறைந்துள்ளது. இப்போது பறவைகளை பிடிப்பவர்களும் குறைந்து விட்டார்கள். அதேசமயம் இயற்கை அழிக்கப்படுகிறது. வீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பு போல பறவைகளை பார்க்க முடிவதேயில்லை. அண்மையில் கோவை குற்றாலத்திற்கு புகைப்படம் எடுக்க சென்றிருந்தேன். அப்போது மரத்தில் இருந்து விழுந்த ஆந்தை குஞ்சு ஒன்றை கண்டெடுத்தேன். அது நல்ல நிலையில் இருந்ததால் உடனடியாக பறக்க விட்டுவிட்டேன். எந்த இலாப நோக்கமும், விளம்பரமும் இன்றி பறவைகளுக்கு உதவி செய்து வருகிறேன். இது மகிழ்ச்சியை தருகிறது” என மன நிறைவுடன் தெரிவித்தார்.

தற்போது கூட காயம்பட்ட ஒரு மைனா குஞ்சிற்கு உணவளித்து, பராமரித்து பறக்க வைக்க சிறகை விரித்து பறக்கிறார், சுப்பிரமணியன்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Ukraine Putin Trump: புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
புதினையே போட்டுத்தள்ள பிளான் போட்ட உக்ரைன்.?; ட்ரம்ப்புக்கு போன Call; ஜெலன்ஸ்கி பதில் என்ன.?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
Embed widget