மேலும் அறிய

விஜய் மாநாடு ; அரசியல் எதிரி யார் என்று வெளிப்படுத்தியுள்ளார் - தமிழிசை செளந்தரராஜன்

இன்று தனது எதிரிகளை அடையாளப்படுத்துகிறேன் என்று கூறி, அரசியல் எதிரி என்று திமுகவை அடையாளப்படுத்தியது வரவேற்கத்தக்கது - தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் ; 

தமிழகத்தில் ஒரு புதிய கட்சி உதயமாகி இருக்கிறது. விஜய் அவர்களின் கட்சிக்கு எனது வாழ்த்துக்களை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். சில நிகழ்வுகள் நடந்ததற்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். உதாரணத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது பேசுவதற்கு முன்னால் தாய் தந்தையரை வணங்கியது. அடையாளத்தை உறுதிப்படுத்தியது பதநீரை மாநில பானமாக அறிவிப்பேன் என்று கூறியது.

அரசியல் எதிரி திமுக - வரவேற்கத்தக்கது

தாக்குதல் அரசியல் இல்லாமல் ஆரோக்கிய அரசியலை முன்னெடுப்பேன் என்று கூறியது பாராட்டுக்குரியது. இன்று தனது எதிரிகளை அடையாளப்படுத்துகிறேன் என்று கூறி அரசியல் எதிரி என்று திமுகவை அடையாளப்படுத்தியது வரவேற்கத்தக்கது. ஊழலை கடுமையாக எதிர்ப்பேன் என்றும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்திற்கு ஆபத்து. துணிச்சலாக பிரகடனப்படுத்தியது மக்களிடம் மன மாற்றத்தை எதிர்ப்படுத்தும் குடும்ப ஆட்சியின்  உதயாவிற்கு எதிராக உதயமாகி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பாஜகவை மறைமுகமாக என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை பாஜக மக்களை பிளவு படுத்தவில்லை என்ற தங்கள் கொள்கை தான் மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் என்ற தாரக மந்திரம். நல்ல குடிநீர் கொடுப்போம் என்று கூறுகிறீர்கள் அதுதான் மாண்புமிகு பாரதப் பிரதமரின் ஜல் சக்தி திட்டம் இல்லம் தோறும் நல்ல குடிநீர். முதியவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறீர்கள் பாரதப் பிரதமரின் 70 வயது  மருத்துவ காப்பீடு திட்டம்.

பசியை போக்கும் என்கிறீர்கள் கரீப் கல்யாணி யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக  இலவச தானியம் 5 கிலோ வழங்குகிறார்கள். மதச்சார்பின்மை பற்றி கூறுகிறீர்கள். சிறுபான்மையினர் 25 இலட்சத்திற்கும் அதிகமான பேர் பாஜகவில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து இருக்கிறார்கள்.

ஆளுநர்களை நீக்க வேண்டும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை மாநிலத்திற்கு நல்லது செய்த ஆளுநர்களும் இருக்கிறார்கள். மரியாதைக்குரிய அம்பேத்காரை பாராட்டி விட்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் பதவியை அவ்வளவு இலகுவாக நீக்குவேன் என்று சொல்வது சரியல்ல.

தமிழக மாணவர்கள் 14 இலட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். அரசு பள்ளி மாணவர்கள் 7.5 ரிசர்வேஷன் இல்லாமலேயே மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்கிறார்கள். இருமொழிக் கொள்கை ஆதரிக்கிறிரோம் என்று கூறிகிறீர்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படுத்தினால் அது நல்லது தானே... பாஜகவை பற்றிய நீங்கள் கொண்டுள்ள தவறான கருத்துக்களை நான் உங்களுக்கு விளக்க முடியும்....அதிகாரப்பகிர்வு  என்ற ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்கிறீர்கள்.

தாங்கள் மட்டுமே என்ற அதிகார ஆணவத்திற்கு பதிலடி கொடுப்பதாக இருக்கும் நீங்கள் கொள்கை எதிரியாக  அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தங்கள் விளக்கங்களைச் சொன்னால் அதை ஒப்புக்கொள்ளக்கூடும்...

உங்கள் அரசியல் எதிரியை  மக்கள் நலனுக்காக முன்னெடுத்துச் சென்றால் நல்ல அரசியல் மாற்றத்திற்கு  இயக்கம் வித்திடக்கூடும். மக்களுக்கான சேவையை முன்னெடுத்துச் செல்லுங்கள் நன்றி வணக்கம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget