மேலும் அறிய
Advertisement
மனைவியின் கர்ப்பத்தில் சந்தேகம் - கைவிட்ட கணவருக்கு எதிராக குடும்பத்துடன் மனைவி சாலை மறியல்
வரலட்சுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் வயிற்றில், வளரும் குழந்தை தனது இல்லை என கூறி இமானுவேல் கொடுமைப்படுத்துவதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் இமானுவேல் (25). இவர் அதே பகுதியில் வசித்து வரும் வரலட்சுமி (19) என்கிற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதல் வீட்டிற்கு தெரிய வர, பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவருக்கும் திருமணமானதை அடுத்து சென்னை அருகே உள்ள ஏகாட்டூர் பகுதியில் இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதனிடையே வரலட்சுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் வயிற்றில், வளரும் குழந்தை தனது இல்லை என கூறி இமானுவேல் கொடுமைப்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் வரலட்சுமியை அடித்து துன்புறுத்தி தனது தாய் வீட்டிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் வரலட்சுமியின் பெற்றோர்கள், இமானுவேல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் கோரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வரலட்சுமி வளர்புரம் பகுதியில் தனது குடும்பத்தினர் 50க்கும் மேற்பட்டோர் உடன் பேரம்பாக்கம் - சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட போது தனக்கு காதல் கணவரால் இழைக்கப்பட்ட கொடுமைக்கு நியாயம் கிடைக்க வேண்டும், என்னுடைய ஒழுக்கத்தை தவறாக பேசிய கணவர் மீது காவல்துறையினர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் இதனால் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வரலட்சுமி குடும்பத்தினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இம்மானுவேல் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணை கைவிட்ட கணவருக்கு எதிராக குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தை கைவிட்ட பிறகு வரலட்சுமி குடும்பத்துடன் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை தற்போது துவங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வரலட்சுமிடம் கணவர் இமானுவேல் எந்த மாதிரியான கொடுமைகளைச் செய்தார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion