உடல் எடை குறைக்கணுமா? ரத்த சர்க்கரையை குறைக்கணுமா? இதோ ஜூஸ் ரெசிப்பி..
இந்தியாவில் உடல் பருமன் (Obesity) எனப்படும் உடல்பருமன் நோய் அதிகரித்து வருவதாக அண்மையில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உடல் பருமன் (Obesity) எனப்படும் உடல்பருமன் நோய் அதிகரித்து வருவதாக அண்மையில் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இன்னமும் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் கூட உடல்பருமன் நோயும் அதிகரித்து வருகிறது எனக் கூறுகிறது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய பெண்கள், ஆண்கள் மத்தியில் உடல்பருமன் நோயானது 4% அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வீல் 2.1% ஆகவே இருந்தது.
இந்நிலையில் எதை செய்தால் உடல் எடை குறையும் என்ற குறுக்கு வழியை மக்கள் தேடத் தொடங்கிவிட்டனர்.
ஆனால் அவை எதுவுமே உதவாது என்பது தான் உண்மை. உண்மையிலேயே உடல் எடை குறைய வேண்டும் என்றால், அதை ஊட்டச்சத்து நிபுணர், மருத்துவர் ஆலோசனைகளுடன் எல்லா பரிசோதனைகளையும் செய்த பின்னரே மேற்கொள்ள வேண்டும்.
View this post on Instagram
க்ரீன் ஸ்மூத்தி அருந்தலாமா?
நம் உடல் எடையைக் குறைக்க க்ரீன் ஸ்மூத்தி நிச்சயமாக அருந்தலாம். இவற்றில் பழ ஸ்மூத்தி, காய்கறி ஸ்மூத்தி, கீரை ஸ்மூத்தி என நிறைய வகைகள் உண்டு. அவற்றில் சிலவற்றிற்கான ரெஸிபி இதோ..
அவகோடா ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
க்ரீன் ஆப்பிள் - 2 நறுக்கியது
வெள்ளரிக்காய் - 1 நறுக்கியது
கொத்தமல்லி - சிறிதளவு
அவகோடா - ஒரு பழத்தில் பாதி
எலுமிச்சை - ஒரு பழச்சாறு
செய்முறை:
கொத்தமல்லி, ஆப்பிள், வெள்ளரிக்காய் உள்பட அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.
இதனுடன் ஐஸ் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
இப்போது அப்படியே அருந்தலாம் அல்லது வடிகட்டியும் அருந்தலாம்.
இதுதவிர க்ரீன் ஆப்பிள், கீரை, பார்ஸ்லி, இஞ்சி சேர்த்து அதை ப்ளெண்ட் செய்து கொஞ்சம் எலுமிச்சை சேர்த்து ஒரு ஸ்மூத்தி செய்யலாம்.
பழ ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
பாதாம் பால் - 1 ½ கப்
பாலக்கீரை - 2 கப்
வாழைப்பழம் - 1 நறுக்கியது (குளிரூட்டப்பட்டது)
விருப்பமான மற்றொரு பழம் - 1 கப்
செய்முறை:
அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.
எந்த அளவுக்கு இலகுவாக வேண்டுமோ, அந்த அளவுக்கு கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
பச்சை நிற பழ ஸ்மூத்தி இப்போது தயார்.