வெல்லம் தின்னு சுடு தண்ணி குடிங்க.. அப்புறம் சொல்லுங்க...
வெல்லம் தின்னு சுடு தண்ணீர் குடித்துவிட்டு அதனால் ஏற்படும் நன்மைகளை அனுபிவித்துவிட்டுச் சொல்லுங்கள்.
வெல்லம் தின்னு சுடு தண்ணீர் குடித்துவிட்டு அதனால் ஏற்படும் நன்மைகளை அனுபிவித்துவிட்டுச் சொல்லுங்கள். நம் தென்னிந்திய உணவைப் பொறுத்தவரையில் திருமூலரின் திருமந்திரமான உணவே மருந்து மிகவும் பொருந்தும். நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு உணவுப் பொருளும் உடலுக்கு அத்தனை ஆரோக்கியம் தருபவையாக உள்ளன.
அந்த வரிசையில் வெல்லத்தின் நன்மைகளில் ஒன்றைப் பற்றி அறியவுள்ளோம்.
சிலருக்கு எந்நாளும் வயிற்றுப் பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்றவவை பாடாய்ப்படுத்தும். அவஸ்தை தாங்க முடியாமல் சிலர் எதைத் திண்ணால் பித்தம் தெளியும் என்பதுபோல் அலைவார்கள். உண்மையில் வெல்லம் சாப்பிட்டால் பித்தம் தெளியும். வீட்டில் நிலக்கடலை சாப்பிடும்போது அதில் அம்மா ஒரு துண்டு வெல்லத்தையும் போட்டுத்தருவார். அது சுவைக்காக இல்லை ஆரோக்கியத்துக்காக. கடலையில் உள்ள மூக்குப்பகுதி உடலில் பித்தம் சேர்க்கும். அதைக் குறைக்கவே அம்மாவின் ஏற்பாடு வெல்லம். இன்னும் வெல்லத்தின் நன்மைகள் ஏராளம் இருக்கின்றன.
வெல்லம், சுடுதண்ணீர்:
> 2 துண்டு வெல்லத்தை சாப்பிட்டு 1 டம்ளர் சுடுநீரை இரவு தூங்கும் முன் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
> ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டால், செரிமான நொதிகளின் அளவு அதிகரித்து, செரிமானம் சீராக நடைபெறும்.
> வெல்லம் மன இறுக்கத்தை எதிர்க்கும் பொருளாக செயல்படும். இரவு தூங்கும் முன் வெல்லத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்தால், உடலில் ஹேப்பி ஹார்மோன்கள் மேம்படுத்தப்படும். பொதுவாக மன அழுத்தத்துடன் இருந்தால், இரவு நேரத்தில் தூக்கமே வராது.
நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் எல்லாம் வெவ்வேறு சுரப்பிகள் மூலம் பெறப்படும் ரசாயனங்கள்தான். இவை நமது ரத்தத்தின் மூலமே உடல் முழுவதும் பரவுகின்றன. இவற்றின் முக்கியப் பணி நமது உடல் நிலையையும் மனநிலையையும் சீராக வைத்திருப்பதுதான். இவற்றில் சில ஹார்மோன்கள் நமக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருகின்றன. அதனால் அவற்றை மட்டும் ’ஹேப்பி ஹார்மோன்ஸ்' அதாவது ‘மகிழ்ச்சி தருகிற நாளமில்லா சுரப்பிகள்’ என்று அழைக்கிறோம். டோபமைன், செரட்டோனின், ஆக்ஸிடோசின் மற்றும் எண்டார்பின் ஆகியவைதான் ஹேப்பி ஹார்மோன்ஸ். இரவு தூங்கும் முன் வெல்லத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்தால், உடலில் ஹேப்பி ஹார்மோன்கள் அதிகமாகும் எனக் கூறப்படுகிறது.
வெல்லத்தில் இனிப்பு குறைவு மற்றும் க்ளைசிமிக் இண்டக்ஸ் குறைவு என்பதால் சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருள். சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சாப்பிட்டால், பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
இரவு தூங்கும் முன் வெல்லத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்தால், உடலில் ஹேப்பி ஹார்மோன்கள் அதிகரிக்கும்.
>வெல்லத்துடன் சிறிது ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால், வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் குறையும். வாயில் பாக்டீரியாக்கள் அதிகம் இருந்தால் தான், வாய் துர்நாற்றம் வீசும். வெல்லம் இதற்கு நல்ல தீர்வை வழங்கும்.
>வெல்லம் சாப்பிட்டு சுடுநீரைக் குடித்தல், சிறுநீரகத்தில் உள்ள மிகச் சிறிய கற்களை உடைத்தெறிய உதவும்.
இத்தனை நன்மை கொண்ட வெல்லம் திண்ண கூலியா தரவேண்டும்.. சாப்பிடுங்கள்.. ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )