பாவாடையில் மீன் பிடித்த சாதனா.. குளியல் ஆடையுடன் சாலையில் வீடியோ பதிவு!
குளியல் ஆடையுடன் குளித்த இடத்திலிருந்து வீடு வரை அப்படியே நடந்து செல்லும் சாதனாவின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
டிக்டாக் பிரபலம் திருச்சி சாதனா... திடீரென குறும்படத்தில் நடிப்பார். திடீரென சிட்டியில் விசிட் அடிப்பார்... அப்புறம் பார்த்தால் காட்டுவாசியாக காட்டுக்குள் திரிவார். இவருக்கான முகம் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவருக்கே தெரியுமா என்றும் தெரியாது. இந்நிலையில் தான் சாதனாவின் புதிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். ‛பாவாடையில் பிடித்த மீன்’ என்கிற தலைப்பில் அவர் பேசியிருக்கும் அந்த வீடியோவில், கால்வாய் ஒன்றில் குட்டிக்குழந்தைகளுடன் குளித்து மகிழும் சாதனா, பின்னர் தன்னுடயை பாவாடையில் மீன் பிடித்தார். சிறிய சிறிய கெண்டை மீன்களை பிடித்த அவர், டாப்பா ஒன்றில் அவற்றை அடைத்தார்.
மீன் பிடித்த மகிழ்ச்சியில் குழந்தையாகவே மாறிய சாதனா... துள்ளிக்குதித்து அதை விளக்குவது தான் அந்த ஒரு நிமிட ப்ளஸ் வீடியோவின் சிறப்பு. புரட்டாசி மாதம் பிறப்பதால் சிறப்பாக மீன் குழம்பு வைத்து சாப்பிடப் போவதாகவும், பின்னர் கோயிலுக்கு போகப்போவதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறுகிறார். போதாக்குறைக்கு உடன் வரும் சிறுவர்களும், சிறுமிகளும் அதே குதூகலத்துடன் உற்சாகமாக அவருடன் பயணிக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், குளியல் ஆடையுடன் குளித்த இடத்திலிருந்து வீடு வரை அப்படியே நடந்து செல்லும் சாதனாவின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ சாதனாவின் முழு வீடியோ...
சில தினங்களுக்கு முன்பு தான் சாதனா காட்டுவாசியாக காட்டுக்குள் செய்த சேட்டைகள் பேசும் பொருளானது. இந்நிலையில் கால்வாயில் குளித்து குதூகலித்த அவரது வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அவர் காட்டுக்குள் போட்ட சேட்டைகள் இதோ...
‛அபோகலிப்டா‛ அரபு வெர்சனில் திருச்சி சாதனா... ஆதாம்... ஏவாலாக காட்டுக்குள் வேட்டு!#TikTok #TrichySadhana #ShortFilm #Viralhttps://t.co/WE1GNvwhSZ
— ABP Nadu (@abpnadu) September 15, 2021
இறங்கி அடிக்கும் சாதனாவின் இந்த முயற்சிகள் அவரது சக போட்டியாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளுக்கு...
‛அபோகலிப்டா‛ அரபு வெர்சனில் திருச்சி சாதனா... ஆதாம்... ஏவாலாக காட்டுக்குள் வேட்டு!
அம்பானி வீட்டில் ஜி.பி.முத்து... ஆச்சரியத்தில் திகைத்துப் போன தருணம்!
அம்பானி வீட்டில் ஜி.பி.முத்து... ஆச்சரியத்தில் திகைத்துப் போன தருணம்!#Ambani #GPMuthu #Mumbai #TikTok #Video #Viralhttps://t.co/CDrDobXzE4
— ABP Nadu (@abpnadu) September 16, 2021