மேலும் அறிய

Chennai Wonderla: 42 ரைடுகள், 16 வாட்டர் ரைடுகள்.. தயாரான சென்னை வொண்டர்லா.. சென்னைக்கு புதிய அடையாளம்..!

chennai wonderla Amusement Park: சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில், 42 சவாரிகள் இடம் பெற உள்ளன.

Chennai Wonderla Theme Park : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைய உள்ளது. இதில் பல்வேறு விளையாட்டுகள் இடம் பெற உள்ளன.

வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா (Wonderla Amusement Park)  

உலகம் முழுவதும் பொழுதுபோக்கு பூங்கா என்பது மக்களின், முக்கிய தேர்வாக இருக்கிறது. குழந்தைகளுடன் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்று, வருவதும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை புறநகர் பகுதியில், பல்வேறு பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. கோடைகாலம் மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தினமும் படையெடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் பொழுதுபோக்கு பூங்கா கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. 

இதற்கு மக்களிடம் இருக்கும் பெரும் ஆதரவு, பல கோடி ரூபாயை முதலீடு செய்ய நிறுவனங்களை தூண்டுகிறது. அந்த வகையில், இந்தியாவில் முன்னணி தீம் பார்க் நிறுவனமாக, வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வொண்டர்லா தீம் பார்க் செயல்படவில்லை என்றாலும், பெங்களூருக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் படையெடுக்கின்றனர். 

சென்னையில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா - Chennai Wonderla Amusement park 

சென்னையிலிருந்து மிக அருகில் இருக்கும் வொண்டர்லா பூங்கா பெங்களூரில் அமைந்துள்ளது. பெங்களூரில் இருக்கும் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவிற்கு தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையில் அந்த நிறுவனம் இறங்கியது. 

சென்னை வொண்டர்லா எங்கு அமைகிறது ? Chennai Wonderla Theme Park Location

வொண்டர்லா நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதல் பொழுதுபோக்கு பூங்காவை அமைக்க உள்ளது. சென்னை புறநகர் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட, பழைய மகாபலிபுரம் சாலையில், திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் என்ற பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக, பொழுதுபோக்கு பூங்கா அமைய உள்ளது. சுமார் 510 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் - India largest Roller Coaster

வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard எனும் கோஸ்டர் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டு, அனைத்துவித பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்த ரோலர் கோஸ்டர் இந்தியாவில் மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக இருக்கப் போவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதை போன்று, ரோலர் கோஸ்டர் சென்னையிலும் அமைய உள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த ரோலர் கோஸ்டர் அமைப்பதற்கு மட்டும் 80 கோடி ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இடம்பெறும் சவாரிகள் என்னென்ன ? What are the Rides ?

கொச்சியில் மொத்தம் 38 சவாரிகள் உள்ளன. பெங்களூரை பொறுத்தவரை 39 சவாரிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 14 சவாரிகள் நீர் சம்பந்தமான விளையாட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ஹைதராபாத்தை பொருத்தவரை 36 சவாரிகள் உள்ளன. இதில் தண்ணீர் சம்பந்தமான சவாரிகள் 17 என்பது குறிப்பிடத்தக்க. அந்த வகையில் சென்னையில் எவ்வளவு சவாரிகள் இடம்பெறும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சென்னையில் அமைய உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மொத்தம் 42 சவாரிகள் இடம் பெற உள்ளன. இவற்றில் 16 சவாரிகள் நீர் சவாரிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக தனியாக குழந்தைகளுக்கு என பிரத்தியேகமாக 10 சவாரிகள் இடம் பெற உள்ளன. மொத்தம் 52 சவாரிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக மிஷன் இன்டர்செல்லர், ரோலர் போஸ்டர், வை-ஸ்கீம், ஒண்டர்லா பம்ப், பைரேட் ஷிப் உள்ளிட்ட சவாரிகள் இடம் பெற உள்ளன.

பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா எப்போது? Chennai Wonderla Theme Park Opening Date 

தொடர் விடுமுறை நாட்களின்போது, வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி திறப்பதற்கான அனைத்து கூறுகளும் இருப்பதாக நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, தேதி- முழு விவரம்!
அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, தேதி- முழு விவரம்!
ஹனிமூன் 2.0.. கணவனை முடித்த மனைவி..! இடிக்காத கார், திருடுபோகாத நகை- காதலனுடன் சிக்கியது எப்படி?
ஹனிமூன் 2.0.. கணவனை முடித்த மனைவி..! இடிக்காத கார், திருடுபோகாத நகை- காதலனுடன் சிக்கியது எப்படி?
Pollachi Dindigul 4 lane project : பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
ABP Premium

வீடியோ

Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |
US Trade Deal with India | ட்ரம்ப் விரித்த வலை ரஷ்யா நட்பை முறிக்கும் இந்தியா? மோடி முடிவின் பின்னணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, தேதி- முழு விவரம்!
அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, தேதி- முழு விவரம்!
ஹனிமூன் 2.0.. கணவனை முடித்த மனைவி..! இடிக்காத கார், திருடுபோகாத நகை- காதலனுடன் சிக்கியது எப்படி?
ஹனிமூன் 2.0.. கணவனை முடித்த மனைவி..! இடிக்காத கார், திருடுபோகாத நகை- காதலனுடன் சிக்கியது எப்படி?
Pollachi Dindigul 4 lane project : பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்
’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்
UGC NET Result: வெளியான ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்; எத்தனை பேர் பாஸ்? கட் ஆஃப் எவ்ளோ? காண்பது எப்படி?
UGC NET Result: வெளியான ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்; எத்தனை பேர் பாஸ்? கட் ஆஃப் எவ்ளோ? காண்பது எப்படி?
Bharat Taxi: தனியாருக்கு குட்பாய்..! 0% கமிஷன், 30% குறைந்த கட்டணம் - பாரத் டாக்ஸி சேவை - சென்னையிலுமா?
Bharat Taxi: தனியாருக்கு குட்பாய்..! 0% கமிஷன், 30% குறைந்த கட்டணம் - பாரத் டாக்ஸி சேவை - சென்னையிலுமா?
Kilambakkam railway station : இன்னும் 2 மாதம் தான்... கிளாம்பாக்கம் ரயில் நிலையம், நடைமேம்பாலம் திறக்கப்படும்.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
கிளாம்பாக்கம் ரயில் நிலையமும், பேருந்து நிலைய நடைமேம்பாலமும் எப்போது திறக்கப்படும்-அரசு அசத்தல் அறிவிப்பு
Embed widget