‛அபோகலிப்டா‛ அரபு வெர்சனில் திருச்சி சாதனா... ஆதாம்... ஏவாலாக காட்டுக்குள் வேட்டு!
இதில் சொல்ல வந்த கருத்து என்னவென்று தெரியவில்லை. ஆனால் அபோகலிப்டாவின் அடுத்த வெர்ஷன் என்று மட்டும் தெரிகிறது. அவர்கள் ஏதோ ஒரு பாஷை பேசுகிறார்கள். கண்டிப்பாக அது தமிழ் இல்லை.
முன்னாள் டிக்டாக் பிரபலம், இந்நாள் யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களின் அன்பு சிநேகிதி. இப்படி பல பட்டங்களை சுமந்து கொண்டு, கலை சேவை செய்து கொண்டிருக்கும் திருச்சி சாதனாவின், அசுரி திரைப்படம் விநாயகர் சதூர்த்தியில் வெளியாகி பல படங்களுக்கு ‛டப்’ கொடுத்து வரும் நிலையில்(!), அவரது அடுத்த படைப்பு என்ன என்று தமிழ் ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இனி தமிழக ரசிகர்களை மட்டும் குஷிப்படுத்தினால் போதாது, ஹாலிவுட், டாலிவுட், பூலிவுட் என அத்தனை வுட்டையும் குஷிப்படுத்த தயாராகிவிட்டார் சாதனா. அனைவரையும் கவர்ந்த அபோகலிப்டா படத்தை நாம் எல்லாம் மறந்திருக்கமாட்டோம். காட்டுவாசி மனிதர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். அந்த படத்தின் தாக்கம் சாதானவிற்கு எப்படியோ வந்துவிட்டது.
அசுரன் படத்தை ஓவர்டேக் செய்ய அசுரி எடுத்தது போல, அபோகலிப்டா படத்தை ஓவர் டேக் செய்ய தற்போது அதற்கு போட்டியாக ஒரு படத்தை எடுத்துள்ளார். அதவும் அடர்ந்த காட்டுக்குள் ஆதாம், ஏவால் போல சாதனாவும், மற்றொருவரும் இலைகளை கொண்ட ஆடையை அணிந்து, இன்பமாய் சுற்றி வருகிறார்கள். செடி, கொடிகளில் கிடைக்கும் பழங்களை உண்கிறார்கள். மரங்களில் தாவு குரங்களுக்கு டப் கொடுக்கிறார்கள். அதே போல அருவிகளில் ஓடும் நீரை பருகி, யானைகளுக்கு அதிர்ச்சி தருகிறார்கள்.
அதையெல்லாம் விட கொடுமை, காட்டு மிருகங்களை விட கொடூரமாக கத்தி, கதறி வனத்தை வசமாக்குகிறார்கள். எதற்காக இந்த முயற்சி, ஏன் இந்த அதிர்ச்சி என்பதெல்லாம் புரியாத புதிராக இருக்கும் நிலையில், திடீரென காட்டுக்குள் பைக்கில் வரும் இருவர், ஒரு பொட்டலத்தை வீசி செல்ல, அதை தூரத்தில் இருந்து பார்க்கும் சாதனா, ஓடிவந்து அதை தன் ஆதிவாசி காதலருடன் பிய்த்து உள்ளே பார்த்தால் கிரில் சிக்கன், வித் மைனேஸ். அதுவரை கோழியை பார்க்காத மாதிரி, இருவரும் சண்டை போட்டு கோழியை மீண்டும் கொலை செய்து சாப்பிடுகிறார்கள்.
இறுதியில் அவர்கள் அடித்துப்பிடித்து அதை உண்பதுடன் வீடியோ முடிகிறது. இதில் சொல்ல வந்த கருத்து என்னவென்று தெரியவில்லை. ஆனால் அபோகலிப்டாவின் அடுத்த வெர்ஷன் என்று மட்டும் தெரிகிறது. அவர்கள் ஏதோ ஒரு பாஷை பேசுகிறார்கள். கண்டிப்பாக அது தமிழ் இல்லை. அரபாகவும் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அவர்களின் மன திருப்திக்காக அதை அபோகலிப்டா அரபி வெர்ஷனாகவே பார்ப்போம். பெர்பாமன்ஸ் என்கிற பெயரில், சாதனா ஆரம்பம் முதல் முடியும் வரை ரத்தக் காட்டேரியாக நடித்திருக்கிறார்கள்.
அந்த கொடுமையான வீடியோவை கீழே காணலாம்...