Vijay TV pugazh: விஜய் டிவி புகழ் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு... ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சாகசம்!
Vijay TV pugazh: சில நாட்களுக்கு முன், ஜிபி முத்துவை வைத்து அபாயகரமாக பைக் ஓட்டிய டிடிஎப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததும், கைது செய்து ஜாமினில் விட்டதும் நாம் அறிந்தது தான்.
பிரபலங்களுக்கு ஒரு சிக்கல் உண்டு. அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக அவர் கூறுவதுண்டு. அதில் உண்மையும் இருக்கிறது. பிரபலமான பிறகு வெளியில் செல்லும் போது ரசிகர்களால் அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
அதற்காக பலர் மாறுவேடங்களில் செல்வதும், சிலர், அறிமுகம் இல்லாத தேசங்களுக்கு சென்று வருவதையும் நாம் பார்க்கிறோம். அப்படி ஒரு பிரபலம், விஜய் டிவி புகழ். குரூப்ல டூப் மாதிரி வந்தவர், இப்போது சோலோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சி, புகழுக்கு புகழ் தேடித் தந்தது.
சமீபத்தில் தான், தனது நீண்ட நாள் தோழியை காதல் திருமணம் செய்தார் புகழ். பல மத முறைப்படி திருமணம் செய்தார் என்றெல்லாம் சர்சை எழுந்து, அதெல்லாம் முடிந்துவிட்டது. மறைந்த வடிவேலு பாலஜி மீது அதீத அன்பு கொண்ட புகழ், தன் திருமண நாளில் அவரது போட்டோவுக்கு அஞ்சலி செலுத்தியதும், பின்னர் வடிவேலு பாலாஜியின் நினைவு நாளில் தனக்கு பாலாஜியே மகனாக பிறக்க வேண்டும் என வணங்கி அஞ்சலி செலுத்தியதும் நெகிழ்ச்சியாக இருந்தது.
View this post on Instagram
இந்நிலையில், தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் புகழ் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் தன்னுடைய எமஹா பைக் ஒன்றில், மங்கி குல்லா போட்டுக் கொண்டு வேகமாக வரும் புகழ், சிறிது நேரத்தில் தனது குல்லாவை கழற்றிவிட்டு, அதே வேகத்தில் பைக்கில் பறந்து செல்கிறார். இவை அனைத்தையும் ஹெல்மேட் போடாமலேயே செய்து முடித்த புகழ், பைக்கு ஓட்டும் போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற அடிப்படை விதியை பின்பற்றாமல், சாகசம் செய்திருப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன், ஜிபி முத்துவை வைத்து அபாயகரமாக பைக் ஓட்டிய டிடிஎப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததும், கைது செய்து ஜாமினில் விட்டதும் நாம் அறிந்தது தான். திரை பிரபலங்கள் பலரும், பைக் ஓட்டும் காட்சிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஹெல்மெட் அணிந்து தான் பைக் ஓட்டிச் செல்கின்றனர். அப்படியிருக்கும் போது, பலர் பின்தொடரும் விஜய் டிவி புகழ் போன்றவர்கள், ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டிச் செல்வது உண்மையில் வருந்தக்கூடியது தான்.