Maruti Suzuki Grand Vitara: மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
Grand Vitara Benefits: மாருதி சுசுகி நிறுவனத்தின் டாப் எஸ்யூவி காரான கிராண்ட் விதாராவிற்கு ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 100 ரூபாய் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், அதன் ஹைப்ரிட் எஸ்யூவி-யான கிராண்ட் விதாரா காருக்கு 1.93 லட்சம் வரை பலன்களை அறிவித்துள்ளது. நெக்சா மூலம் விற்கப்படும் இந்த மாடலுக்கான பலன்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
கிராண்ட் விதாராவிற்கான சலுகைகள்
மாருதி சுசுகி அதன் நெக்சா மாடலான கிராண்ட் விதாராவிற்கு ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 100 ரூபாய் வரை பலன்களை வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் சலுகையை அறிவித்துள்ளது. இதில், ரொக்கத் தள்ளுபடி, நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம், ஸ்கிராப்பேஜ் போனஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் சலுகை ஆகியவை அடங்கும்.
மேலும், இந்த காருக்கு தற்போது 3 வருடங்கள் அல்லது 1 லட்சம் கிலோ மீட்டர் வாரண்ட்டி வழங்கப்படுகிறது. அதோடு, ப்ரெஸ்ஸா காரை கொடுத்து கிராண்ட் விதாரா சிக்மா மாடல் காரை எக்ஸ்சேஞ்ச் செய்வோருக்கு, மாதம் 9,999 ரூபாய் இஎம்ஐ வரும் வகையிலான ஃபைனான்ஸ் சலுகையும் உள்ளது. இதற்கு, 9.5 சதவீத இன்ட்ரெஸ்ட் ரேட்டுடன் பலூன் ஃபைனான்ஸ் என்ற புதிய இஎம்ஐ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கிராண்ட் விதாராவின் சிறப்புகள்
மாருதி சுசுகி கிராண்ட் விதாராவில், லெவல்-2 ADAS அம்சங்களின் தொகுப்பை பெற்று, இதனை பெறும் மாருதி நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. ஏனெனில் கீழ் கிரில் முன் பார்க்கிங் சென்சார்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம் மற்றும் ஹில் ஹோல்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. இதுபோக, 9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட்டில், ஆட்டோ ப்யூரிஃபை உடன் கூடிய PM2.5 டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார், டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், 8 அட்ஜெட்மென்ட்டுகளுடன் கூடிய எலெக்ட்ரிக் ட்ரைவர் சீட், இவி மோட், 17 இஞ்ச் மெஷின்ட் அலாய் சக்கரங்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.
இன்ஜின், விலை விவரங்கள்
இந்த 7 சீட்டர் காரில், பவர்டிரெய்னைப் பொறுத்தவரை, தற்போது விற்பனையில் உள்ள 5 சீட்டர் எடிஷனில் இருப்பதை போன்றே தொடர்கிறது. அதன்படி, FWD மற்றும் AWD உடன் 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கும். ஐந்து-ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அல்லது ஆறு-ஸ்பீட் டார்க் மாற்றி உள்ளிட்ட டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் விற்பனைக்கு வரலாம். CVT உடன் வேலை செய்யும் 1.5-லிட்டர் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனும் இருக்கும்.
நிறுவன குறிப்புகளின்படி மைலேஜ் விவரங்கள்...
பெட்ரோல் MT: ஒரு லிட்டருக்கு சுமார் 18-20 கிலோ மீட்டர்கள்
பெட்ரோல் AT: ஒரு லிட்டருக்கு சுமார் 17-19 கிலோ மீட்டர்கள்
ஹைப்ரிட் eCVT: 25-28 kmpl மைலேஜ்
இந்த காரின் விலை, 11.42 லட்சத்தில் தொடங்கி, டாப் வேரியன்ட் 20.68 எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கின்றன.





















