மேலும் அறிய

நாராயணரை பழிவாங்க காத்திருக்கும் சமுத்திரராஜன் மற்றும் அவரது மனைவியின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொண்ட லட்சுமி….

பாற்கடலை கடைந்து லட்சுமியை மீட்க போராடும் நாராயணர்…. நாராயணர் பாற்கடலை கடைந்து சமுத்திரராஜன் பிடியில் சிக்கியிருக்கும் லட்சுமியை மீட்டாரா….?

லட்சுமி நாராயணா நமோ நமஹ  

December 23 to December 27 [ 1 hour Episode ]

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது… ”லட்சுமி நாராயணா நமோ நமஹ” ஆன்மிகப் புராண தொடர். 

இந்த வாரம் 

நாராயணரை பழிவாங்க காத்திருக்கும் சமுத்திரராஜன் மற்றும் அவரது மனைவியின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொண்ட லட்சுமி…. பாற்கடலை கடைந்து லட்சுமியை மீட்க போராடும் நாராயணர்…. நாராயணர் பாற்கடலை கடைந்து சமுத்திரராஜன் பிடியில் சிக்கியிருக்கும் லட்சுமியை மீட்டாரா….?
 
அசுரன் ஹயக்ரீவன் நாராயணரை பழிவாங்க நாராயணர் தோற்றுவித்த புது உலகத்தினுள்ளே நுழைகிறான். அங்கு சிவன் மற்றும் தேவர்கள் முன்னிலையில் நாராயணரை யுத்தத்திற்கு அழைக்கிறான். லட்சுமியை எனக்கானவள் என்று கூறி நாராயணரை ஏளனப்படுத்துகிறான். லட்சுமிக்கு அசுரனின் வார்த்தையை கேட்டதும் ஆத்திரம் பீறிட்டு வருகிறது. நாராயணரிடம் அசுரன் ஹயக்ரீவனை வதம் செய்யுங்கள் என்று வேண்டுகிறார். நாராயணர் அம்பு தொடுத்து ஹயக்ரீவனின் தலையை கொய்து எறிகிறார். ஆனால் ஹயக்ரீவனின் தலை தானாக பழையாபடி கழுத்துடன் வந்து இணைந்து கொள்கிறது. நாராயணர் அசுரனை வதம் செய்ய முடியாமல் திணறுகிறார். அப்போது சிவன் நாராயணரிடம் ”ஹயக்ரீவன் ஆதிசக்தியிடம் வரம் வாங்கி வந்தவன் அவனை அவ்வளவு சீக்கிரத்தில் அழிக்க முடியாது” என்கிறார். அந்த சமயத்தில் ஹயக்ரீவன் அம்பு எய்து நாரயணரின் தலையை கொய்து விடுகின்றான். உடனே தலையில்லாத நாராயணரை பார்த்து கேலியாக சிரித்தபடி லட்சுமியிடம் ”எனக்கு என்னால் மட்டுமே அழிவு வேறு எவராலும் என்னை அழிக்க முடியாது…இந்த சவத்தை விட்டு என்னோடு வந்துவிடு” என்று கூறுகிறான். லட்சுமியை இழுத்துச் செல்ல லட்சுமியை நோக்கி நடந்து நெருங்குகிறான். லட்சுமி அழுது கண்கலங்குகிறார். சிவன் மற்றும் தேவர்கள் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அப்போது நாராயணர் குதிரைத்தலை கொண்ட ஹயக்ரீவ அவதாரம் எடுத்து அசுரன் ஹயக்ரீவனை அழிக்கிறார். லட்சுமியைக் காப்பாற்றுகிறார்.
 
உடனே லட்சுமி வீரலட்சுமி அவதாரம் எடுத்து மொத்த அசுரகுலத்தையும் அழித்தொழிக்க புறப்பட்டு செல்கிறார். நாராயணர் அது தவறு என்று அறிவுரை சொல்லி லட்சுமியை திருப்பி அழைத்து வருகிறார். லட்சுமிக்கு புடவை மடித்துக் கொடுத்து ஆபரணங்கள் சூட்டி மகிழ்கிறார். அப்போது துர்வாசமுனிவர் இந்திரனுக்கு விட்ட சாபத்தினால் மொத்த தேவர்குலமும் பாதிக்கிறது. நாராயணரும் லட்சுமியும் தங்கள் அலங்காரம் கலைந்து செழிப்பு மங்குகின்றனர். செழிப்புக்கு அதிபதியான லட்சுமி நாராயணரை வீட்டு நீங்கும் நிலை ஏற்படுகிறது. நாராயணரும் லட்சுமியும் துயரத்துடன் பிரிகின்றனர். தனித்து நிற்கும் லட்சுமியை சமுத்திரராஜனும் அவரது மனைவியும் தங்களோடு அழைத்துச் சென்று மகளாக பாவித்து தங்க வைக்கின்றனர். அப்போது நாராயணர் பிரம்மா மூலம் சமுத்திரராஜன் தன்னை பழிவாங்கவே லட்சுமியை கடலுக்கு நயவஞ்சகமாக அழைத்துப் போயிருப்பதை அறிகிறார். சமுத்திரராஜனிடம் சென்று லட்சுமியை விடுவிக்கும்படி கேட்கிறார். சமுத்திரஜாரன் முடியாது என்று கூறி விடுகிறார். உடனே நாராயணர் ”பாற்கடலை கடைந்து நான் என் லட்சுமியை மீட்பேன்” என்று சபதமிடுகிறார். அது உங்களால் முடியாது என்று சமுத்திரராஜன் எதிர்த்து சபதமிடுகிறார். நாராயணரா சமுத்திரராஜனா என்கிற போட்டி தொடங்குகிறது.
 
இந்நிலையில் சமுத்திரராஜன் லட்சுமிக்கு பாதாளராஜனை மணமகனாக பேசி முடிக்கின்றார். பாதாளராஜனும் லட்சுமியை தங்கள் லோகம் அழைத்துப் போக வருகிறார். லட்சுமி பாதாளராஜனிடம் இருந்து தப்பிக்க பெரிதாக போராடி சண்டையிட வேண்டியிருக்கிறது. லட்சுமி ”நான் நாராயணரின் மனைவி என்னை  அடைய நினக்காதே…அழிந்து போவாய் “ என்று சொல்கிறார். ஆனால் பாதாளராஜன் செவிசாய்க்க மறுக்கிறான். ஆபத்தில் சிக்கிக்கொண்ட லட்சுமியின் நிலை என்ன…?
நாராயணர் பாற்கடலை கடைந்து லட்சுமியை மீட்டாரா….?
 
இப்படி பல திருப்பங்களுடன் இந்த வார லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.
 
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பகும் லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடரை காணத் தவறாதீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்! இந்த ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையே மெட்ரோ!
ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்! இந்த ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையே மெட்ரோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | GingeeChiranjeevi Controversy | TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்! இந்த ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையே மெட்ரோ!
ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்! இந்த ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையே மெட்ரோ!
New Income Tax Bill 2025: மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்... எப்போது அமலுக்கு வரும் தெரியுமா.?
மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்... எப்போது அமலுக்கு வரும் தெரியுமா.?
MOTN Survey: தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
Double Decker Flyover: அடடே..! மேல மெட்ரோ, கீழே வாகன போக்குவரத்து.. கோவையில் 'டபுள் டக்கர்' மேம்பாலம், எங்கே தெரியுமா?
Double Decker Flyover: அடடே..! மேல மெட்ரோ, கீழே வாகன போக்குவரத்து.. கோவையில் 'டபுள் டக்கர்' மேம்பாலம், எங்கே தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.