மேலும் அறிய

Double Decker Flyover: அடடே..! மேல மெட்ரோ, கீழே வாகன போக்குவரத்து.. கோவையில் 'டபுள் டக்கர்' மேம்பாலம், எங்கே தெரியுமா?

Coimbatore Double Decker Flyover: கோவையி டபுள் டக்கர் மேம்பாலம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Coimbatore Double Decker Flyover: மேல் தளத்தில் மெட்ரோ, கீழ் தளத்தில் வாகன போக்குவரத்து என, கோவையில் டபுள் டக்கர் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

கோவை மெட்ரோ ரயில் திட்டம்:

தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவை நெருங்கியுள்ளன். இதனிடையே, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வு பணிகள் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. அதன் விளைவாக நடப்பாண்டில் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை மெட்ரோ ரயில் சேவை பூமிக்கு அடியில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை திட்டத்தில் அதுபோன்ற சிக்கல்கள் இல்லாததால், மத்திய அரசு அனுமதி கொடுத்த அடுத்த 3 ஆண்டுகளில் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

34.8 கிமீ தூரத்திற்கான மெட்ரோ திட்டம்:

அவிநாசி மற்றும் சத்தியமங்கலம் சாலையில் சுமார் 34.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 32 நிறுத்தங்களோடு மொத்தம் 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் தயாராகி உள்ளது. இதில் சத்தியமங்கலம் சாலையில் முதல் தளமாக மெட்ரோ திட்டம் அமையும். அவிநாசி சாலையில் நெடுஞ்சாலை துறையினரின் பாலங்கள் இருக்கும் இடத்தில் இரண்டாம் தளமாக அதைவிட உயரத்தில் ஆங்காங்கே மெட்ரோ ரயில் பாலம் அமைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த டபுள் டக்கர் மேம்பாலம் தான் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

டபுள் டக்கர் மேம்பாலம் எங்கு?

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), மாநில நெடுஞ்சாலை ஆணையத்துடன் (சிறப்பு திட்டம்) இணைந்து, கோவையின் கோல்ட்வின்ஸ் முதல் லி மெரிடியன் ஹோட்டல் வரை 3 கி.மீ நீளத்திற்கு இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் தளத்தில் பொதுப்போக்குவரத்து வழக்கம்போல் தொடர, மேல் தளத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இதன் மூலம் மெட்ரோ நிர்வாகம் கூடுதலாக நிலம் எதையும் கையகப்படுத்த வேண்டியதில்லை. கோவையில் புதன்கிழமை நடைபெற்ற 'கோயம்புத்தூர் நகர மேம்பாலங்கள் - சமீபத்திய புதுப்பிப்பு' என்ற அமர்வில் உரையாற்றிய, ​​கோயம்புத்தூரின் நெடுஞ்சாலைகள் (சாலை பாதுகாப்பு) பிரிவு பொறியாளர் ஜி. மனுநீதி இந்த தகவலை பகிர்ந்தார்.

ரூ.600 கோடியில் நீட்டிக்கப்பட்ட பணிகள்:

மாநில நெடுஞ்சாலைகள்  ஆணையம் (சிறப்புத் திட்டம்) அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்ட்வின்ஸ் வரை 10.1 கி.மீ நீளத்திற்கு ஒரு உயர்த்தப்பட்ட வழித்தடத்தை அமைத்து வருகிறது. இந்நிலையில்  கோல்ட்வின்ஸ் முதல் நீலம்பூர் வரை 5 கி.மீ நீளத்திற்கு உயர்த்தப்பட்ட வழித்தடம் நீட்டிக்கப்படும் என்றும், மாநில அரசு இந்த திட்டத்திற்காக ரூ.600 கோடி ஒதுக்கும் என்றும் கடந்த நவம்பர் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். உடனடியாக, மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் (சிறப்புத் திட்டம்) பிரிவு அந்தப் பாதையில் நில அளவீடு மற்றும் மண் பரிசோதனையைத் தொடங்கியது. விரிவான திட்ட அறிக்கையும் தயாரித்துள்ளது.

மெட்ரோ ரயில் பணிகள்:

இதற்கிடையில், உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் வழியாக,  நீலம்பூர் ஒருங்கிணைந்த மெட்ரோ ரயில் நிலையம் வரை 20.4 கி.மீ நீளத்திற்கு வழித்தடம்-I பணியை செயல்படுத்துவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது மேலும், இந்திய விமான நிலைய ஆணையம் (AAI),  L&T பைபாஸ் சாலையை ஒட்டி  ஒரு புதிய முனையக் கட்டிடத்தைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஹோட்டல் லி மெரிடியன் முதல் விமான நிலைய முனையக் கட்டிடம் வரை 100 அடி நீள சாலை அமைக்கப்படும் என்றும், ஹோட்டல் லி மெரிடியன் முதல் புதிய விமான நிலைய முனையக் கட்டிடம் வரை தூண்களை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget