முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
TN Police : முதல்வர் ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையில் கடந்த சில மாதங்களாகவே பெண் காவலர்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சென்னையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் இணை ஆணையர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை:
சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையராக இருந்து வருபவர் மகேஷ்குமார், இவர் மீது சில நாட்களுக்கு முன்பாக உடன் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் மகேஷ் குமார் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகாரளித்தார்.
அவரின் புகார் பெறப்பட்டு ஐபிஎஸ் சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டது. விசாரணையில் பெண் காவலரின் புகாரில் உண்மை இருப்பதை அறிந்த சென்னைன் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மகேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் விசாகா கமிட்டி அறிக்கையின் படி மகேஷ் குமார் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயின் பறிப்பு :
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் காவலரிடம் சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறியது. அது மட்டுமில்லாமல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், குற்றப்பிரிவு காவல்துறையில் காவலராக பணிபுரிபவர் லட்சுமி அவரிடம் மர்ம நபர்கள் 11 சவரன் நகையை பறித்து சென்றனர்.
இதையும் படிங்க: மதுரை மாட்டுத்தாவணி தோரணவாயில் இடிக்கும் பணி.. பொக்லைன் ஆப்ரேட்டர் உயிரிழந்த சோகம் !
காவல் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் மோகன்ராஜ் என்கிற சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் மதுபோதையில் காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்றுள்ளர்.அவர் மதுபோதையில் இருப்பதை அறிந்த சக அதிகாரிகள் அவரை மேலே உள்ள அறையில் இருக்குமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். மேலே சென்ற அவர் அங்கு இருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் காவலர் புகாரளித்தார். அதன் பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த பின்னர் அவர் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் துறையில் இப்படியா!
முதல்வர் ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையில் கடந்த சில மாதங்களாகவே பெண் காவலர்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை எதிர்க்கட்சியினரும் சுட்டிக்காட்டி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் இது மாதிரியான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

