Sona in Roja Serial: ஓ சோனா... ஓ சோனா... ரோஜா சீரியலில் வடிவேலுவின் ஜோடி?
நடிகை சோனா ரோஜா சீரியலில் அறிமுகம் ஆகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சூழலில் சீரியல்களின் பங்கு முக்கியமானது. தற்போது இருக்கும் பெரும்பாலான சேனல்களில் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. இந்த சீரியல் கலாசாரத்தை தொடங்கிவைத்தது சன் டிவி என சொல்லலாம். 28 ஆண்டுகளாக கோலோச்சிவரும் சன் டிவியில் தற்போது நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
குறிப்பாக ஒரு சேனலை டிஆர்பியில் உச்சம் கொண்டு செல்வதிலும் சீரியல்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அந்தவகையில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தற்போதைய நிலவரப்படி டாப்பில் இருப்பது ரோஜா சீரியல்.
இரவு 9 மணியிலிருந்து 9.30 மணிவரை ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிபு சூர்யன் கதாநாயகனாகவும், ரோஜா கதாபாத்திரத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா நல்காரும் நடிக்கின்றனர். இந்த சீரியலை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் டிஆர்பில் ரோஜா சீரியலை ஓவர்டேக் செய்து கயல் சீரியல் சென்றுள்ளதாக சேனல் வட்டாரம் கூறுகிறது. இதனால் ரோஜாவை மீண்டும் டிஆர்பி டாப்பிற்கு கொண்டுவர சீரியல் குழு புதிய கேரக்டரை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான குசேலன் படத்தில் வைகை புயல் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த சோனாவை சீரியலுக்குள் கொண்டுவர குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சோனா பொதுவாக சினிமாவில் கவர்ச்சி வேடம் ஏற்பவர் என்பதால் இந்த சீரியலில் அவருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்கப்போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Vaathi movie | லேட் பண்ணக் கூடாது.. தீயாய் வேலை செய்யும் வாத்தி குரூப்.! தனுஷின் தெலுங்கு பட அப்டேட்.!!
ஒரு பொய் நியூஸ்! ரஜினி சான்ஸும் போய்ட்டு! 1000 கோடி வசூலும்.. - புலம்பும் பிரேமம் இயக்குநர்
Kamalhaasan On Ilayaraja | இளமை மாறாத இளையராஜா.. அண்ணனுக்கு.. கமல்ஹாசன் பதிவிட்ட ஸ்வீட் ட்வீட்..