‛பூ ஒன்று புயலாக மாறியது...’ ரோஜா சீரியல் நடிகையின் சீரியஸ் ஒர்க் அவுட்: புது ப்ராஜக்ட்டுக்கு அச்சாரமா?
சன் டிவியில் 1000 எபிசோடை கடந்தாலும், எண்ட் கார்டிற்கு எந்த அறிகுறியும் இல்லாமல், இன்னும் ஆயிரம் எபிசோடை நோக்கியே செல்லு சீரியல் ரோஜா.
சன் டிவி சீரியல் ரோஜாவின் நடிகை பிரியங்காவின் ஜிம் ஒர்க் அவுட் இன்ஸ்டா வீடியோஸ் தான் சின்னதிரையோரம் இன்றைய ஹாட் டாப்பிக்.
சன் டிவியில் 1000 எபிசோடை கடந்தாலும், எண்ட் கார்டிற்கு எந்த அறிகுறியும் இல்லாமல், இன்னும் ஆயிரம் எபிசோடை நோக்கியே செல்லு சீரியல் ரோஜா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதனாலேயே ஜவ்வாக... இழுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி. பிரியங்கா நல்காரியின் தாய்மொழி தெலுங்கு. இருந்தாலும் தமிழ்நாட்டில் சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகைகளில் அவரும் ஒருவராக ஒய்யாரமாக வலம் வருகிறார்.
View this post on Instagram
தற்போது பிரியங்கா நல்காரி இன்ஸ்டாகிராமில் அவரது ஒர்கவுட் வீடியோக்களை அதிகமாகப் பகிர்ந்து வருகிறார். அதற்கு காரணம் என்ன? திடீரென இப்படி ஒர்கவுட்டில் இறங்க என்ன காரணம் என நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர்.
அதற்கு அரசல்புரசலாக வரும் காரணங்கள் வெள்ளித்திரையைக் கை காட்டுகின்றன. ஆம் அம்மணியை வெள்ளித்திரை கேரக்டர் ரோல்களுக்கு வரவேற்கிறதாம்.
அதற்கு அச்சாரமாகவே அவர் அன்றாடம் ஜிம்மே கதி என ஒர்க் அவுட்டில் படு பிஸியாக இருக்கிறாராம். ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைக்க முயற்சித்து இருக்கிறார் எனத் தெரிகிறது.
1000 எபிஸோட்களைக் கடந்த டோஜா சீரியலில் இப்போது புதிதாக ஒரு கொலை வழக்கைப் புகுத்தி கதை மொக்கையாக இழுப்பதாக ரசிகர்கள் பேசிக் கொள்கின்றனர்.
பிரியங்காவும் எவ்வளவு நாள் தான் சிந்துபாத் கதை போல் இதிலேயே சிக்கிக் கொள்வார். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டாமா. அதான் அம்மணி வெள்ளித் திரை வாய்ப்பு வந்தால் இங்கிருந்து ஜூட் விடலாம் என இறங்கிவிட்டார் போல.
ஆனாலும் கூட ரோஜா சீரியலை சன் டிவி இழுக்கும். இவருக்குப் பதிலாக இவர் என்றொரு கார்டு போட்டாலும் போடுவார்களே தவிர ரோஜாவுக்கு எண்டு கார்டு போட மாட்டார்கள்.