Prasanna - Sneha: அன்பால் நிரப்புகிறாய்! மகள் பிறந்தநாளில் நடிகர் பிரசன்னா நெகிழ்ச்சிப் பதிவு!
Prasanna - Sneha : மகள் ஆத்யந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு சினேகா - பிரசன்னா தம்பதி உணர்ச்சிகரமான பதிவைப் பகிர்ந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி எனக் கொண்டாடப்படும் நடிகை சினேகா தன்னுடைய அழகாலும் அசத்தலான நடிப்பாலும் பல ரசிகர்களைப் பெற்றவர். முன்னணி நடிகையாக உச்சத்தில் இருந்த சமயத்தில் நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்த நிலையில், இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த அழகான தம்பதியினருக்கு க்யூட்டான ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சினேகா - பிரசன்னாவின் மகள் ஆத்யந்தாவின் நான்காவது பிறந்தநாள் இன்று. மகளின் பிறந்தநாளுக்கு கணவன் மற்றும் மனைவி இருவரும் அவரவரின் இன்ஸ்டாகிராம் மூலம் ஆத்யந்தாவின் அழகான குறும்புத்தனமான புகைப்படங்களை பகிர்ந்து மனதுக்கு மிகவும் நெருக்கமாக குறிப்பு ஒன்றை எழுதி போஸ்ட் செய்துள்ளனர்.
நடிகர் பிரசன்னா தன்னுடைய குறிப்பில் "ஆது குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ எங்கள் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு. மற்றும் நீ எல்லையற்ற மகிழ்ச்சி மற்றும் அன்பால் எங்களை நிரப்பினாய். நீ, தான் எங்களின் எங்களுக்கு உயிரும் ஆன்மாவும். 4 வயதிலேயே வயதில் மூத்தவர்களுக்கு இருக்கும் அளவுக்கு அறிவும் அன்பும் இருக்கிறது. உன்னுடைய அன்பினால் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் நீ தாயாகிவிட்டாய். கருணை, இரக்கம் மற்றும் அன்பு கொண்ட இதே குணங்களுடன் ஒரு சிறந்த பெண்ணாக வளர்வதை என நான் நம்புகிறேன். அப்பாவும் அம்மாவும் எப்போதும் உன்னை நேசிப்போம், பாதுகாப்போம். கடவுள் உன்னை எப்பவுமே ஆசீர்வதிப்பார்...ஸ்வீட்டி பை" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
அதே போல நடிகை சினேகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் பேபி டால். நீ எங்கள் வாழ்க்கையில் கொண்டு வந்த அனைத்து அன்பு மற்றும் மகிழ்ச்சிக்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் எப்போது எல்லாம் மிகவும் தாழ்வாக இருக்கிறேனோ அப்போது எல்லாம் ஒரு அம்மாவாக மாறி என்னை அணைத்து கொள்வாய். தோழியின் அரவணைப்பு தேவைப்படும் போது நல்ல தோழியாக மாறி விடுவாய். உன்னுடைய நல்ல ஆத்மாவுக்கு கடவுள் எப்போதும் உன் வாழ்க்கையில் எல்லா மகிழ்ச்சியையும் தரட்டும். எதுவும் உன்னை மாற்றிவிட அனுமதிக்காதே. நாங்கள் உன்னை மிகவும் மிக மிக மிக நேசிக்கிறோம் என் தங்கம்" என குறிப்பை எழுதி அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் சினேகா - பிரசன்னா இருவரும் அடிக்கடி அவர்களின் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த லைக்ஸ்களையும் அள்ளிவிடுவார்கள்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் GOAT படத்தில் நடிகர் விஜய் உடன் பல ஆண்டுகள் கழித்து நடித்து வருகிறார் நடிகை சினேகா. 'நான்கு வழி சாலை' மற்றும் துப்பறிவாளன் 2 படங்களில் நடித்து வருகிறார் நடிகர் பிரசன்னா. இருவரும் அவரவர்களின் பணியில் பிஸியாக ஈடுபட்டு வந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவிட ஒருபோதும் தவறியதில்லை.