(Source: ECI/ABP News/ABP Majha)
Entertainment Headlines Aug 24: 69ஆவது தேசிய விருதுகளை எதிர்நோக்கி திரையுலகம்... கிங் ஆஃப் கோதா விமர்சனம்... இன்றைய சினிமா செய்திகள்!
Entertainment Headlines Aug 24: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
மாஸ் காட்டினாரா துல்கர் சல்மான்?.. ‘கிங் ஆஃப் கொத்தா’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ஓராண்டு இடைவெளிக்குப் பின் ‘கிங் ஆஃப் கொத்தா’ (King of kotha) படம் வெளியாகியிருக்கிறது. அப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை நாம் காணலாம். ஓணம் பண்டிகையை முன்னிட்டு துல்கர் சல்மான் நடிப்பில் ‘கிங் ஆஃப் கொத்தா’ (King of kotha) படம் வெளியாகியிருக்கிறது. மலையாள திரையுலகை சேர்ந்த நடிகராக இருந்தாலும் துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் படிக்க
சினிமாவிற்கான 69வது தேசிய விருதுகள்.. தனுஷ், சிம்பு, ஆர்யா இடையே கடும் போட்டி, 5 மணிக்கு அறிவிப்பு
2021ம் ஆண்டு வெளியான இந்திய சினிமாக்களுக்கான தேசிய விருதுகள் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன. இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் படிக்க
“நடிக்க ஆசைப்பட்டேன்; யாரும் கூப்பிடல” - காரணத்தை பகிர்ந்த பாரதிராஜா
சிறிய கண்கள், பெரிய மூக்குடன் கருப்பு நிறத்தில் இருந்ததால் என்னை யாரும் நடிக்க கூப்பிடவில்லை என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். தங்கர் பச்சன் இயக்கி இருக்கும் கருமேகங்கள் களைகின்றன படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில், பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், தங்கர் பச்சன் உள்ளிட்ட பழக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய பாரதிராஜா தனது உடலமைப்பால் ஆரம்ப காலத்த்லி நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என ஆதங்கத்துடன் கூறினார். மேலும் படிக்க
தேசிய விருது பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் மலையாளத் திரைப்படங்கள்...! முழு விபரம்!
2021ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு விருதுகளுக்கான தேர்வுப் பட்டியலில் பெரும்பாலான பிரிவுகளில் மலையாளத் திரைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழைத் தவிர்த்து விருதுகளுக்கு தேர்வாகியுள்ள பிற மொழிப் படங்களை மற்றும் நடிகர்களைப் பார்க்கலாம். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய கங்குபாய் திரைப்படத்தில் நடித்த அலியா பட் தனது நடிப்பிற்காக எக்கசக்கமான பாராட்டுக்களை ஏற்கனவே பெற்றுள்ள நிலையில் தற்போது சிறந்த நடிகைக்கான பிரிவின் கீழ் அலியா பட் தேர்வாகி இருக்கிறார். மேலும் படிக்க
Hip Hop Adhi: முனைவர் பட்டம் பெற்ற இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி ; எதற்காக தெரியுமா?
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில், தமிழ்நாடு ஆளுநரும், பாரதியார் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் இணைவேந்தர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் படிக்க
‘வேட்டையனை லவ் பண்ணனும்போல இருக்கு’.. லதா ரஜினிகாந்தால் உருவானதா ‘சந்திரமுகி 2’?
கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகி படம் வெளியானது. பி.வாசு இயக்கிய இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்ற படமாகும். சந்திரமுகி படத்தில் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், சோனுசூட், வினீத், மாளவிகா, செம்மீன் ஷீலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் படிக்க