
Cinema Headlines: விமர்சனங்கள் பற்றி ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்.. பிரதமர் மோடி ஆட்சி பற்றி ராஷ்மிகா: சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: கோலிவுட் டூ இந்திய சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

"10 ஆண்டுகளில் அபார வளர்ச்சி" பிரதமர் மோடிக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா திடீர் பாராட்டு!
இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசால் அபார வளர்ச்சி கண்டுள்ளதாக நடிகை ராஷ்மிகா கருத்து தெரிவித்துள்ளார். தன் சமீபத்திய நேர்காணலில், “கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்ட வளர்ச்சியானது அற்புதமாக உள்ளது. இந்தியாவை யாராலும் தடுக்க முடியாது. அடல் சேது கடல் மூலம், இரண்டு மணி நேர பயணம் 20 நிமிடங்களில் சாத்தியமாகியுள்ளது. மக்கள் மிகவும் பொறுப்புடன் இருக்கிறார்கள். அதனால் நாடு சரியான பாதையில் செல்கிறது” எனப் பேசியுள்ளார்.
சைந்தவியுடன் பேசிதான் பிரிந்தேன்.. ஆதாரமில்லாமல் என்னனாலும் சொல்லலாமா? - கடுப்பான ஜி.வி.பிரகாஷ்!
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் தங்கள் 11 ஆண்டுகால திருமண பந்தத்தில் இருந்தில் பிரிவதாக அறிவித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த சில நாள்களாக இவர்களது பிரிவு மற்றும் விவாகாரத்து தகவல் பேசுபொருளாக மாறி, பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜி.வி,பிரகாஷ் தன் சமூக வலைதளத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். “பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. யாரோ ஒரு தனிநபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா?” என ஜி.வி. பிரகாஷ் வருத்தத்துடன் தன் இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விஜய்க்கு நல்ல மனசு.. மாறப்போகும் பிரஷாந்தின் வாழ்க்கை.. தியாகராஜன் நெகிழ்ச்சி
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நீண்ட நாள்களுக்குப் பிறகு கம்பேக் தர உள்ளதுடன் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தி கோட் படத்தில் விஜய்க்கு சமமான ஒரு கேரக்டர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், டான்ஸ் ஆடுவதில் கூட அந்த சமநிலையை பேணியதற்கு விஜய்க்கு ஒரு நல்ல மனசு உள்ளது என பிரசாந்தின் அப்பாவும், நடிகர், இயக்குநருமான தியாகராஜன் பாராட்டியுள்ளார்.
திரைத்துறையினர் ஒருவருக்கொருவர் ரொம்ப திட்டாதீங்க.. டி.ராமானுஜம் விழாவில் கமல்ஹாசன் கோரிக்கை!
தமிழ் திரையுலகின் தந்தை எனப் போற்றப்படும் டி.ராமானுஜத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன், அவரைப் பற்றி நினைவுகளையும் திரைத்துறையினர் பற்றியும் மனம் திறந்து பேசினார். அப்போது பேசிய அவர், “இந்த திரைக் குடும்பம் மிக சின்ன குடும்பம். பல தகராறுகள் வரும், பல விவாதங்கள் வரும். நாமெல்லாம் ட்ரெய்ன் வந்து நிற்கும்போது செயல்படும் வியாபாரிகள் போல தான். ட்ரெய்ன் போனதும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொள்ள வேண்டும். யாரையும் ரொம்ப திட்ட வேண்டாம்” என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

