மேலும் அறிய

மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!

ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆயுள், மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுமா என எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், இதுதொடர்பான முடிவை எடுக்கும் வகையில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 55ஆவது கூட்டம் கூட்டப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இந்த கூட்டம் நடைபெற்றது.

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா?

ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்வதில் மாற்று கருத்துகள் நிலவி வருவதால், இதுகுறித்து முடிவு பின்னர் தெரிவிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் சுகாதார காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரியை ஆய்வு செய்யும் நோக்கில் பீகாரின் துணை முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த குழுவில் இடம்பெற்ற பெரும்பாலான உறுப்பினர்கள், ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால், ஒரு சிலர், தற்போதைய 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க பரிந்துரைத்தனர்.

இந்த குழுவுக்கு தலைமை தாங்கிய பீகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, இதுகுறித்து பேசுகையில், "இதுபற்றி மேலும் விவாதிக்கப்பட வேண்டும் என சில உறுப்பினர்கள் கூறினர். எனவே, அமைச்சர்கள் குழு மீண்டும் ஜனவரியில் கூடி விவாதிக்கும்" என்றார்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கிய முடிவு:

டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவும் அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

மூத்த குடிமக்களைத் தவிர மற்ற தனிநபர்களை பொறுத்தவரையில், 5 லட்சம் ரூபாய் வரையிலான பாலிசிகளை உள்ளடக்கிய ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்கு விலக்கு அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், 5 லட்சம் ரூபாய்க்கு மேலிருக்கும் பாலிசிகளுக்கு தற்போதைய 18 சதவீத ஜிஎஸ்டி விகிதமே பொருந்தும்.

இதையும் படிக்க: ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget