Dragon Box Office : விடாமுயற்சியை விரட்டும் டிராகன்...100 கோடியை நெருங்கும் வசூல்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் இந்த வார இறுதியில் 100 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

100 கோடியை நெருங்கும் டிராகன்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படம் வசூல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படம் இப்படம் 3 நாட்களில் 50 கோடி வசூலித்தது. பிரதீப் ரங்கநாதன் ஒரு பக்கம் இயக்குநர் இன்னொரு பக்கம் நடிகர் என ரெண்டிலும் கலக்கி வருகிறார். இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள பிரதீப் ரங்கநாதன் கோலிவுட்டின் அடுத்த வளர்ந்து வரும் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். தமிழ் மட்டுமில்லாமல் கேரளா , ஆந்திராவிலும் அவருக்கு பெரியளவில் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
தமிழ் நாட்டில் டிராகன் படம் 3 நாளில் 24.9 கோடி , ஆந்திரா மற்றும் தெல்ங்கானாவில் ரூ 6.25 கோடிம் கேரளா, கர்னாடகா மற்றும் வட மாநிலங்களில் 6.25 கோடி வசூலித்தது. வெளிநாடுகளில் இப்படம்14.7 கோடி வசூலித்தது. இப்படத்தை தயாரித்தது மட்டுமில்லாமல் தானே இந்த படத்தை தமிழ்நாட்டில் விநியோகமும் செய்துள்ளது ஏஜிஎஸ். இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரியளவில் லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது வரை டிராகன் படம் 80 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இரண்டாவது வாரத்திலும் படத்திற்கு ஹவுஸ் ஃபுல் ஆகி வருவது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. அடுத்து வரக்கூடிய வார இறுதி நாட்களில் டிராகன் படம் 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்ன தலையாக மாறிய பிரதீப்
இந்த ஆண்டு விடாமுயற்சி படம் முதல் 100 கோடி வசூல் ஈட்டிய படமாக அமைந்தது. அஜித்திற்கு அடுத்தபடியாக பிரதீப் ரங்கநாதன் படம் இடம்பிடித்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தி வரும் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்த படங்களில் மிகப்பெரிய கமர்சியல் நடிகராக வளர்வார் என பிரபல நடிகர்கள் சிலர் பேச தொடங்கிவிட்டார்கள்.

