GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஜி.எஸ்.டி வரியானது 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்:
இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 55வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநிலத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
ஜி.எஸ்.டி வரி விகிதம்:
இந்நிலையில், கூட்டம் முடிவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது, “ செறிவூட்டப்பட்ட அரிசிக்கான ஜி.எஸ்.டி வரியானது 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது
மருத்துவத்தில் புற்றுநோய் சிகிச்சை முறையான ஜீன் தெரபி சிகிச்சைக்கு , ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்க குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் போது, கேமிங் தொடர்பானவற்றுக்கு வரி விதிப்பு பற்றி எந்த விவாதமும் இல்லை. இந்த முறை கேமிங் நிகழ்ச்சி நிரலிலோ அல்லது விவாதத்திலோ சேர்க்கப்படவில்லை என தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.
முன் பேக் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பாப்கார்னுக்கு 12 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், கேரமலைஸ் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், பாப்கார்ன் மீதான வரி விகிதம் மாறவில்லை, பாப்கார்ன் மீதான தற்போதைய வரிகள் குறித்த சுற்றறிக்கையை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) வெளியிடுவதற்கு கவுன்சில் ஒப்புக் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்களுக்கான எரிபொருள், ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் வரவில்லை.
பயன்படுத்திய கார்ககள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான சேவை வரி (ஜிஎஸ்டி) தற்போதைய 12% லிருந்து 18% ஆக அதிகரிக்க உள்ளதாகவும் என்று CNBC-TV18 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மேற்கூறிய பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
VIDEO | Union Finance Minister Nirmala Sitharaman (@nsitharaman) addresses a press conference after the 55th GST Council Meeting in Jaisalmer, Rajasthan.
— Press Trust of India (@PTI_News) December 21, 2024
"There is a reduction in the rate of compensation cess to 0.1 per cent on supplies to merchant exporters at par with the GST… pic.twitter.com/MaQGMOxINJ