குட் பேட் அக்லி டீசரை புகழ்ந்த அஜித்தின் அடுத்த பட இயக்குநர்..என்ன சொல்லியிருக்கார் பாருங்க
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டியுள்ளார்

குட் பேட் அக்லி டீசர்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஒப்பந்தமான படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தைக் காட்டிலும் குட் பேட் அக்லி படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம் அந்த படத்தில் அஜித்தின் தோற்றமும், அவரது கெட்டப்பும் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
வாலி , தீனா , பில்லா , ரெட். , அமர்க்களம் என அஜித் நடித்த அத்தனை படங்களின் சாயலும் இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு பக்கம் மிரட்டும் லுக்கில் அஜித் இருக்க இன்னொரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரனின் கண்களை கவரும் செட் லொக்கேஷன் அவரது ஸ்டைல் கதை சொல்லல் , ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை திரையரங்குகள் திருவிழாக்கோலமாக மாற அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் உள்ளது. ரஜினிக்கு பேட்ட படம் அமைந்தது போல் விஜய்க்கு மாஸ்டர் படம் அமைந்தது போல் அஜித் என்கிற ஸ்டாரை கொண்டாடும் வகையில் இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். வெளியான 12 மணி நேரத்திற்குள்ளாக இந்த டீசர் 25 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
டீசரை புகழ்ந்த கார்த்திக் சுப்பராஜ்
#GoodBadUgly teaser filled with Full on energy with Dark Shaded #Ajith sir looks 👌👏🔥
— karthik subbaraj (@karthiksubbaraj) February 28, 2025
All the best @Adhikravi @gvprakash @MythriOfficial & whole team for Big Success 👍👍 https://t.co/bDhBJI4wHo
குட் பேட் அக்லி படத்தின் டீசரை புகழ்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதிவிட்டுள்ளார். அஜித் சாரை டார்க் ஷேடில் காட்டியிருப்பது செம என அவர் தெரிவித்துள்ளார். அஜித்தின் அடுத்த பட கார்த்திக் சுப்பராஜ் இயக்கப்போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது படத்தின் டீசரை அவர் பாராட்டியுள்ளது ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்குமோ என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸூக்குப் பின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்

