Aadhi Nikki Galrani Marriage: சுயமரியாதையை விட்டுக்கொடுக்காம வாழப்போறோம்.. Mrs.நிக்கி, Mr.ஆதி கொடுத்த ஜோடிTalk..
நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் திருமணம் செய்துகொண்ட நிலையில், வாழ்கையில் இருவரும் ஒருவருக்கொருவரின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் வாழப்போவதாக தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் திருமணமான நிலையில், வாழ்கையில் இருவரும் ஒருவருக்கொருவரின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் வாழப்போவதாக தெரிவித்துள்ளனர்.
மிருகம் படம் மூலமாக சினிமாத்துறைக்குள் வந்த நடிகர் ஆதியும், டார்லிங் படம் மூலமாக அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணியும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
Natural 🌟 #Nani & #SundeepKishan dance in joy at #AadhiPinisetty & #NikkiGalrani's haldi ceremony!! 🤩❤️@NameisNani @sundeepkishan @AadhiOfficial @nikkigalrani #TeluguFilmNagar pic.twitter.com/KXr7zuNheC
— Telugu FilmNagar (@telugufilmnagar) May 18, 2022
இரு குடும்பங்களின் முன்னிலையில் நேற்று மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இதில் ஆர்யா, சாயிஷா, சந்தீப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நிக்கி கல்ராணியும் நடிகர் ஆதியும் தங்களுக்கு இடையே காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து பேசியுள்ளனர்.
Finally, #Aadhi and #NikkiGalrani tied the knot❤️
— Indian Clicks (@IndianClicks) May 19, 2022
Congratulations to the newly married couple💐😍@AadhiOfficial @nikkigalrani #Wedding #AadhiNikkiWedding pic.twitter.com/bJ1V7gcqlN
இந்தக்காதல் குறித்து ஆதி கூறும்போது, “ யாகாவாராயினும் நா காக்கா படப்பிடிப்பில்தான் நிக்கியை முதல்ல பார்த்தேன். நான் கொஞம் அமைதி. ஆனா அவங்க பேசிட்டே இருப்பாங்க. எனக்கு அப்பவே அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சு. திடீர்ன்னு ஒரு நாள் எதிர்பாரத விதமா எங்க வீட்டுக்கு பக்கத்துல குடிவந்துட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா பழக ஆரம்பிச்சோம். ஒரு நாள் கூட நாங்க லவ்வ சொல்லிக்கிட்டதில்ல. எட்டு வருஷமா இப்படித்தான் போயிட்டு இருக்கு. எங்க அப்பா, அம்மா நிக்கி மேல அவ்வளவு அன்பா இருக்காங்க.” என்றார்.
View this post on Instagram
இட்லி சாம்பார்தான் பிடிக்கும்
நிக்கி பேசும் போது, “இவங்க வீட்டுல என்ன ரொம்ப அக்கறையா பார்த்துப்பாங்க. ஆதி வீடு, வேலைன்னு இருப்பார். அவங்க குடும்பத்த பார்க்கிறப்ப எனக்கு ஆச்சரியமா இருக்கும். கல்யாணத்த பத்தி வீட்டுல சொன்ன எங்க வீட்டுல இருந்தோ, எங்க வீட்டுல இருந்தோ ஒரு எதிர்ப்போ, மறுப்போ இல்ல. நான் வடநாட்டு பொண்ணுதான். ஆனா எனக்கு இட்லி சாம்பார்தான் பிடிக்கும். தமிழை பேசவும் புரிஞ்சிக்கவும் ஆரம்பிச்சிட்டேன். கல்யாணம் முடிஞ்ச பிறகு சினிமாவுல நடிக்கணுமா அப்படிங்கிறதை இன்னும் முடிவு பண்ணல. இங்க எல்லாமே கூட்டு முடிவுதான். யாரும் இங்க சுயமரியாதையை விட்டுக்கொடுத்து இருக்க வேண்டாம்னு பேசி முடிவெடுத்து இருக்கோம்.” என்றார்
தகவல் உதவி : ஆனந்த விகடன்