மேலும் அறிய

நெல்லையில் நகைக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கநகைகள் கொள்ளை

நகைப்பையுடன் வீட்டுக்கு சென்றவரை அரிவாளால் வெட்டிவிட்டு நகையை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்ற மர்ம கும்பலால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே புது மனைத் தெருவைச் சேர்ந்த அசனார் என்பவரது மகன் மைதீன் பிச்சை (55), இவர் வீரவநல்லூர் அருகே மெயின் பஜாரில் நகைக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்த சூழலில் நேற்றும் வியாபாராத்தை முடித்து விட்டு இரவில் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு, நகைப்பையுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே தெருவில் சென்ற போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் மைதீன் பிச்சையை அரிவாளால் வெட்டிவிட்டு நகையை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.


நெல்லையில் நகைக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கநகைகள் கொள்ளை

இது குறித்து தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இரத்த வெள்ளத்தில் வெட்டு காயங்களுடன் இருந்த மைதீன் பிச்சையை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொள்ளையர்கள் 5 கிலோ வரை நகைகளை கொள்ளையடித்து சென்றதாகவும், அதன் மதிப்பு பல லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.


நெல்லையில் நகைக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கநகைகள் கொள்ளை

இந்த சூழலில் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர், குறிப்பாக நகைகளை பறித்துச் சென்றவர்கள் குறித்த தகவல்களை அப்பகுதியில் சுற்றியுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சி மூலம் ஆய்வு செய்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.  தொடர்ந்து மாவட்ட எஸ்.பி சரவணன், சேரன்மாதேவி டி.எஸ்.பி ராமகிருஷ்ணன், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதோடு விரைவில் கொள்ளையர்களை பிடிப்போம் என்று தெரிவித்தனர்.

வீரவ நல்லூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடந்த 4 வருடத்திற்கு முன்பு 2 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து 18 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி உள்ளனர். ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த சிசிடிவி கேமராக்கள் பழுது காரணமாக இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, நகைக்கடை உரிமையாளரை தாக்கி சுமார் 5 கிலோ வரை தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Harry Potter: 90ஸ் கிட்ஸ்களா - புதிய ஹாரிபாட்டர் ரெடி, இனி இந்த புள்ள தான் ஹெர்மாய்னி - ரிலீஸ் எப்போ?
Harry Potter: 90ஸ் கிட்ஸ்களா - புதிய ஹாரிபாட்டர் ரெடி, இனி இந்த புள்ள தான் ஹெர்மாய்னி - ரிலீஸ் எப்போ?
Embed widget