Crime : 3 ஆண்டுகளில் 12 பேர் கொலை... பணத்திற்காக தாய்லாந்து கர்ப்பிணி வெறிச்செயல்... என்ன நடந்தது...?
முன்னாள் காதலன் உட்பட 12 நண்பர்களுக்கு சயனைடு விஷம் கொடுத்து கொன்ற கர்ப்பிணி பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime : முன்னாள் காதலன் உட்பட 12 நண்பர்களுக்கு சயனைடு விஷம் கொடுத்து கொன்ற கர்ப்பிணி பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் கைது
தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்கில் 12 பேரை கொலை செய்த குற்றத்திற்காக கர்ப்பிணி பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் சரரத் ரங்சிவுதபோர்ன் (32) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சரரத்தின் தோழி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
அதன்படி, சிரிபோர்ன் கான்வாங் என்ற பெண் ஒருவர் இறுதிச் சடங்கில் இருந்தபோது மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துமவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், சில அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் மருத்துவர்கள் கூறினர்.
12 பேர் கொலை
அதன்படி உயிரிழந்த அந்த பெண்ணின் உடலில் சயனைட் விஷம் கலந்ததும், இதனால் தான் அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் கூறினர். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சிரிபோர்ன் கான்வாங் என்ற பெண்ணை கொலை செய்தது சரரத் ரங்சிவுதபோர்ன் என்பது தெரிந்தது. மேலும், அவர் இதே பாணியில் அவரது முன்னாள் காதலன் உட்பட 12 பேரை கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
கொலை செய்யப்பட்ட அனைவரும் 33 முதல் 44 வயதுடைய நபர்கள் எனவும், இவர்கள் அனைவரையும் சரரத் பணத்திற்காக கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இவர்கள் அனைவரையும் கடந்த 3 ஆண்டுகளில் கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
3 ஆண்டுகளில் 12 பேர் மரணம்
அதாவது கடந்த 2020 டிசம்பர் முதல் 2023 ஏப்ரல் வரை 12 பேரை கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையில் உயிரிழந்த அனைவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நகை, பணம் காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளனர்.
இதனை சந்தேகத்தின் பேரில் சரரத் ரங்சிவுதபோர்ன் என்ற பெண்ணை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பணத்திற்காக தனது முன்னாள் காதலன் உட்பட 12 பேரை பெண் ஒருவர் சயனைட் விஷம் கொடுத்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்..ஏமாற்றி அழைத்து வரப்பட்ட பெண்கள் - சென்னையில் நடந்தது என்ன?