மேலும் அறிய

Crime: லாரியில் சிக்கிய பெண்; தலை துண்டாகி உயிரிழப்பு... கணவர் கண்முன்னே சோகம்...சென்னையில் பயங்கரம்!

சென்னை அடையாறில் லாரி மோதி கல்லூரி மாணவி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: சென்னை அடையாறில் லாரி மோதி கல்லூரி மாணவி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கல்லூரி மாணவி:

சென்னை தரமணி பகுதியைச் சேர்ந்தவர் ரகு. அவரது மனைவி ஹேமலதா (25). இவர் கிண்டியில் உள்ள செல்லம்மாள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஹேமலதாவை தினந்தோறும் கல்லூரி மாணவி ரகு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு செல்வார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் ரகு தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். காலை 8.45 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டனர். பைக்கில், ரகுக்கு பின்பு ஹேமலதா அமர்ந்திருந்தார். அப்போது, அடையாறு பகுதியில் மிகக்குறுகிய சாலையில் சென்று கொண்டிருந்த போது, திருவான்மியூரில் இருந்து அடையாறு நோக்கி சிமெண்ட் கலவை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்துக் கொண்டிருந்தது. 

துடிதுடித்து உயிரிழப்பு:

அப்போது, ஹேமலதா, ரகு ஆகியோர் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் டிப்பர்  லாரி வேகமாக மோதியது. இதில், நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்த ரகு சாலை ஓரத்தில் தூக்கி வீசப்பட்டார். மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த ஹேமலதா சாலையின் நடுவில் விழுந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த டிப்பர் லாரி ஹேமலதாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் ஹேமலதா தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் சாலையின் ஓரத்தில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஹேமலதா தனது  கண்முன்  துடிதுடித்து இறந்ததை பார்த்து  ரகு கதறி அழுதுள்ளார். 

லாரி ஓட்டுநர் கைது:

இதுகுறித்து அடையாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, படுகாயமடைந்த ரகுவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் ஹேமலதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி ஓட்டுநர் ஆசாத் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். கணவர் கண்முன்னை மனைவி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க 

GST Council Meeting: இணைய விளையாட்டுகள் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரி..எப்போதிலிருந்து நடைமுறை? வெளியான அறிவிப்பு

Asian Champions Trophy Hockey: முதல் நாளே 3 போட்டி .. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் இன்று தொடக்கம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget