மேலும் அறிய

வீட்டுக்குள் துர்நாற்றம்.. சிக்கிய கடிதம்.. கொரோனா வேலையிழப்பால் பறிபோன இரு உயிர்கள்!

கொரோனா காரணமாக சுசீந்திரன் வேலை இழந்துள்ளார். அதனை அடுத்து, உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அண்ணன், தங்கை இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கொரோனா சூழல் காரணமாக வேலை இழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் விழுப்பரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. எனினும், வேலையை இழந்து இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் நிறையப்பேர் சவாலான வாழ்க்கையை எதிர் கொண்டுள்ளனர்.

இந்த சூழலில், விழுப்பரம் கே.கே ரோடு பதியைச் சேர்ந்த சுசீந்திரன் என்பவர் (58) அவரது தங்கை பரிமளா (50) ஆகியோர் பண கஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தனியார் கடை ஒன்றில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்துள்ளார் சுசீந்திரன். குடும்ப பிரச்சனையாக கணவரை பிரிந்து இருந்த பரிமளா, தனது அண்ணனுடன் வசிந்து வந்துள்ளார்.

வீட்டுக்குள் துர்நாற்றம்.. சிக்கிய கடிதம்.. கொரோனா வேலையிழப்பால் பறிபோன இரு உயிர்கள்!

இந்நிலையில், கொரோனா காரணமாக சுசீந்திரன் வேலை இழந்துள்ளார். இதனால், அவர்களால் வீட்டு செலவு, மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் இருந்துள்ளது. அதனை அடுத்து, உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அண்ணன், தங்கை இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நேற்று காலை முதல் சுசீந்திரனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டார் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டை உடைத்து கொண்டு சென்று பார்த்த காவல் துறையினர், அழுகிய நிலையில் இருவரின் உடல்களை கைப்பற்றியுள்ளனர். மீட்கப்பட்ட சடலங்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், வீட்டை பரிசோதனை செய்து காவல் துறையினர் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில், தனது கணவர் உறவினர்கள் மூலம் மாதம் தோறும் கிடைத்துவந்த பணத்தை வைத்து சமாளித்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக எதுவும் தரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும், தனது அண்ணனுக்கு மன நிலை பாதித்த நிலையில், தனக்கும் மருத்துவ உதவி அதிகம் தேவைப்பட்டதால் பண கஷ்டம் இருந்த சூழலில் சாக முடிவு செய்திருப்பதாக கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். தங்களின் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும், வீடில் உள்ள பொருட்களை விற்று பானுமதி என்பவரிடம் பணத்தை ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget