Crime: பெற்ற மகன், மகளை கொலை செய்துவிட்டு தாய் தந்த வாக்குமூலம் - தந்தையே இப்படியா?
Bangaluru Crime: பெங்களூருவில் பெற்ற தாயே மகன் மற்றும் மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: பெற்ற மகன், மகளை கொலை செய்துவிட்டு தாய் தந்த வாக்குமூலம் - தந்தையே இப்படியா? bangaluru mother confessed after killed own son and daughter crime news Crime: பெற்ற மகன், மகளை கொலை செய்துவிட்டு தாய் தந்த வாக்குமூலம் - தந்தையே இப்படியா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/10/f9359c70a7d9ea5f11dde0c99b34a6501712756292238898_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bangaluru Crime: பெங்களூருவில் பெற்ற மகன் மற்றும் மகளை கொலை செய்த தாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மகன், மகளை கொன்ற தாய்:
கடந்த 10ம் தேதி இரவு பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறையை பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தனது மகன் மற்றும் மகளை தானே கொன்றுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் தந்த முகவரி விவரங்களின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகளுக்கு பாலியல் தொல்லை தந்த தந்தை:
போலிசார் நடத்திய விசாரணையில், ”பெங்களூரு ஜாலஹள்ளி அருகே போவி காலனியில் நான் வசித்து வருகிறேன். தனக்கு 9 வயதில் மகனும், 7 வயதில் மகளும் இருந்தனர். தனது மகளுக்கு பெற்ற தந்தையே பாலியல் தொல்லை கொடுத்தார். இதுதொடர்பான வழக்கில் கடந்த மாதம் ஜாலஹள்ளி போலீசார், எனது கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். எனது கணவர் பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவர் சிறைக்குச் சென்ற பிறகு எனது மகன், மகளுடன் நான் எனது தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். அவர்களை வளர்ப்பதற்காக தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றேன். அதன்பிறகும் பணப்பிரச்சினை தொடர்ந்து இருந்தது.
தீராத நிதிப்பிரச்னை:
கணவர் சிறைக்கு சென்ற பின்பு நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன். வேலைக்குச் சென்றாலும் நிதிப் பிரச்னை தீரவில்லை. நான் பட்ட கஷ்டங்களை எனது மகன், மகளும் அனுபவிக்க கூடாது என்று நினைத்தேன். இதனால் தான் நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த எனது மகன் மற்றும் மகளின் முகத்தை தலையணையால் அமுக்கி, மூச்சை திணறடித்து கொலை செய்தேன்”என கண்ணீர் மல்க அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெற்ற தாயே தனது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சம்பவம் நடந்த அன்று அந்த பெண்ணின் தாய் வேலை விஷயமாக சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இதனால் மகன், மகளுடன் தனியாக இருந்த பெண், 2 பேரையும் கொலை செய்துள்ளார். ஒருவேளை பெண்ணின் தாயார் வீட்டில் இருந்திருந்தால் 2 குழந்தைகளும் உயிர் பிழைத்து இருக்கும் என்று கருதப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)