மேலும் அறிய

அரியலூர் சிமெண்டு ஆலை மேலாளர்கள் வீடுகளில் 70 பவுன் நகைகள் கொள்ளை

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே சிமெண்டு ஆலை அதிகாரிகள் வீடுகளில் 70 பவுன் நகைகள் கொள்ளை, மர்மநபர்களுக்கு காவல்துறையினர் வலைவீச்சு...

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ஆலத்தியூரில் ராம்கோ சிமெண்டு ஆலை உள்ளது. இந்த ஆலையின் மேலாளர்களாக சுதர்சன், நாராயணன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களும், அந்த ஆலையில் பணியாற்றும் மற்ற அதிகாரிகளும் அப்பகுதியில் உள்ள சிமெண்டு ஆலை அலுவலர்கள் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருமண நாளையொட்டி சுதர்சன் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுவிட்டார். இதேபோல் நாராயணன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த குடியிருப்புக்குள் புகுந்த மர்மநபர்கள், அடுத்தடுத்து மொத்தம் 8 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். நேற்று காலை அந்த வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில், சுதர்சன் வீட்டில் இருந்த 57 பவுன் நகைகளையும், நாராயணன் வீட்டில் இருந்த 13 பவுன் நகைகளையும், மற்ற 6 வீடுகளிலும் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


அரியலூர் சிமெண்டு ஆலை மேலாளர்கள் வீடுகளில் 70 பவுன் நகைகள் கொள்ளை

இதையடுத்து அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய் குடியிருப்பு வளாகத்தை சுற்றி ஓடி வந்து படுத்துக்கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளை நடந்த வீடுகளில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் போன்றவர்களையே பல கட்ட சோதனை செய்யும் சிமெண்டு ஆலையின் செக்யூரிட்டி சிஸ்டத்தை மீறி எப்படி திருடர்கள் உள்ளே புகுந்து கொள்ளை அடித்துவிட்டு, தப்பி சென்றனர் என்பது பற்றியும், மொத்தம் எவ்வளவு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக முதியோர், பெண்கள் வீட்டில் தனியாக இருக்க அச்சபடுகிறார்கள். ஆகையால் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பாதுக்காப்பான சூழ்நிலையைல் உருவாக்கி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget