(Source: ECI/ABP News/ABP Majha)
கார்ப்ரேட் வரியை ஓவர்டேக் செய்த வருமான வரி; பல ஆண்டுகளுக்கு பின் இது எப்படி நடந்தது?
2021ம் ஆண்டில், தனிநபர் நேரடி வரி வசூல் மூலமாக மத்திய அரசு 4 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் வரியைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் கார்ப்பரேட் வரி மூலம் 4 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசுக்கு வரும் வரி வருவாயில் கார்பரேட் வரியை விட நேரடி வரி வசூலின் வருவாய் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு 2020-21ம் நிதியாண்டில் வரி வருவாயாக ரூ. 14,24,035 கோடியும், வரியற்ற வருவாயாக ரூ.2,08,059, கடனற்ற முதலீட்டு வருவாயாக ரூ.57,626 கோடியும், இவை அனைத்தையும் சேர்த்து ரூ.16,89,720 கோடி வருவாய் பெற்றது. கடனற்ற முதலீட்டு வருவாயில், ரூ.19,729 கோடி கடன்களை மீட்டது மூலமும், ரூ. 37,897 கோடி பங்கு விற்பனை மூலமும் திரட்டப்பட்டது.
நேரடி வசூல் வரி, கார்ப்பரேட் வரி, கலால் வரி, சுங்க வரி, சரக்கு மற்றும் சேவை வரி, ஆகியவை மத்திய அரசின் வருவாய் ஆதாரங்களாக உள்ளன. 1991 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரசிம்ம ராவ் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். பொதுத்துறையின் பங்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தனியாருக்கு விற்றல், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (எப்டிஐ) அதிகரித்தால், தொழில்துறை கட்டுப்பாடுகளை தளர்த்துதல் போன்றவை 1991 பொருளாதார கொள்கையின் முக்கிய தூண்களாக இருந்தன. இதன் காரணமாக, 1996 ஆண்டில் இருந்து, மத்திய அரசின் நேரடி வரி வருவாயில் கார்ப்பரேட் வரியின் பங்கு முக்கியத்துவம் பெற ஆரமபித்தது.
2021ம் ஆண்டில், தனிநபர் நேரடி வரி வசூல் மூலமாக மத்திய அரசு 469000 கோடி ரூபாய் வரியைப் பெற்றுள்ளது. கார்ப்பரேட் வரி மூலம் 457000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஒரு நிதியாண்டில் ஒரு தனிநபர் ஈட்டிய மொத்த வருவாய்க்கு ஏற்ப வருமான வரி நிர்ணயத்துள்ளது. ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் மேல் இருந்தால் தனிநபர் ஒருவர் வருமான வரியை செலுத்த வேண்டும்.
வரிவிதிப்பிற்குரிய வருமான அளவு |
தற்போதுள்ள வரி விகிதங்கள் |
புதிய வரிவிகிதங்கள் |
0 - 2.5 லட்சம் வரை |
விலக்களிக்கப்பட்டது |
விலக்களிக்கப்பட்டது |
2.5 – 5 லட்சம் வரை |
5% |
5% |
5 – 7.5 லட்சம் வரை |
20% |
10% |
7.5 – 10 லட்சம் வரை |
20% |
15% |
10 – 12.5 லட்சம் வரை |
30% |
20% |
12.5 -15 லட்சம் வரை |
30% |
25% |
15 லட்சத்திற்கும் மேல் |
30% |
30% |
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கநிலை, இந்தியா பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதித்தது. 21ம் நிதியாண்டில், தொழில்துறை மற்றும் சேவைகள் துறை வளர்ச்சி முறையே 9.6 சதவீதம் மற்றும் 8.8 சதவீதம் குறையும் என மதிப்பிடப்படுகிறது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தய சேதம் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் பாதித்தன.
இருப்பினும், கார்ப்பரேட் வரி விகிதம் குறைந்ததற்கு பலதரப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. 2019ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த கார்ப்பரேட் வரி விகிதம் குறைப்பு இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. வரிவிதிப்பு விதிகள் (திருத்த) அவசரச்சட்டம் 2019ன் கீழ், உள்நாட்டு நிறுவனங்கள் விதிவிலக்கு அல்லது ஊக்கத்தொகை கோராவிட்டால் அவை 22% (முன்னதாக 30% ) வருமானவரி செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்தது. இத்தகைய உள்நாட்டு நிறுவனங்களுக்கு அனைத்துக் கூடுதல் வரிகள், செஸ் உட்பட வரிவிகிதம் 25.17%-மாக இருக்கும். இத்தகைய நிறுவனங்கள் குறைந்தபட்ச மாற்று வரியையும் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவித்தது.
கார்ப்பரேட் வரி குறைப்பதன் மூலம் வளர்ச்சியையும், முதலீட்டையும் அதிகப்படுத்த முடியும் என்று மத்திய அரசு முன்னதாக தெரிவித்தது. ஆனால், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 70 ஆண்டுகாலம் இல்லாத அளவுக்கு பின்னடைவை சந்தித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
India Employment: வேலைவாய்ப்பையும் வாரிச்சுருட்டிய கொரோனா: ஒரு கோடி பேர் வேலை இழப்பு!
இது ஒருபுறமிருக்க, 2020-21 ஆம் நிதியாண்டில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வரிக்குப் பின் இலாபம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.6% ஆக அதிகரித்தது. 2014-15 நிதியாண்டிற்குப் பிறகு ( ஜிடிபி- யில் 3.1%) அதிகப்படியான வருவாய் வளர்ச்சியாகவும் இது இருந்தது. எனவே, கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகும், அநேக பெருநிறுவனங்கள் லாபங்களை சந்தித்துள்ளன என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.
மத்திய அரசின் வருவாய் நாட்டு மக்களின் கைகளில் இருந்து அதிகம் பெறப்படுவதால், தனிநபர் செலவீனங்கள் குறையத் தொங்கும். தனிநபர் நுகர்வு குறையத் தொடங்கினால் பொருளாதார தேக்கமும், சந்தை நடவடிக்கைகளும் குறையத் தொடங்கும்.
India Employment: வேலைவாய்ப்பையும் வாரிச்சுருட்டிய கொரோனா: ஒரு கோடி பேர் வேலை இழப்பு!