மேலும் அறிய

Upcoming Cars In 2024: 2024ல் இந்தியாவில் அறிமுகப்போகும் புதிய கார்களின் லிஸ்ட் - மாருதி தொடங்கி மஹிந்திரா வரை

Upcoming Cars In 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி, ஹுண்டாய் மற்றும் டாடா உள்ளிட்ட நிறுவனங்கள், அடுத்த ஆண்டு புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளன.

Upcoming Cars In 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள புதிய கார்களின் விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். 

ஸ்போர்ட்ஸ் கார்கள் 2024:

அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய SUVகள், மின்சார கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் ஆகியவற்றின் விவரங்களை நாம் ஏற்கனவே பட்டியலிட்டுள்ளோம்.  அந்த வரிசையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள மேலும் சில கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் ஹுண்டாய், மாருதி, டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் புதிய மாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

New Hyundai Creta:

புதிய க்ரெட்டா மற்ற சந்தைகளில் கிடைக்கும் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் போல இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம், இந்தியர்களின் ரசனைக்கு ஏற்றவாறு ஸ்டைலிங்குடன் மாறுபட்ட பதிப்பைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதிய க்ரெட்டா புதிய டிசைனிங் லேங்குவேஜை கொண்டிருக்கும்.  இது பெரிய உலகளாவிய ஹூண்டாய் எஸ்யூவிகளைப் ஒத்திருக்கும்.  அதே வேளையில் இதன் புதிய பவர்டிரெயின்கள் வாடிக்கையாளர்களின் கவனத்த ஈர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய க்ரெட்டா 360 டிகிரி கேமரா, ADAS மற்றும் 18 இன்ச் வீல்கள் போன்ற அம்சங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆப்ஷன்களுடன்,  அதிக சக்திவாய்ந்த 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் பெறுகிறது.

Maruti Swift:

புதிய ஸ்விஃப்ட் ஒரு தலைமுறை மாற்றத்தைப் பெற்றாலும், ஸ்டைலிங் அம்சத்தில் தனது அடிப்படை சாராம்சத்தை தக்கவைத்துக் கொள்கிறது. அதேநேரம்,  புதிய அம்சங்கள் மற்றும் புதிய இன்ஜினை பெற உள்ளது. புதிய ஸ்விஃப்ட் மிகவும் நடைமுறைக்குரியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன கேபின் வடிவமைப்பையும், புதிய மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினையும் பெற உள்ளது. அதே வேளையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் விருப்பங்களையும் பெறுகிறது.

Tata Curvv:

டாடா நிறுவனத்தின் Curvv இந்தியாவில் மின்சார வாகனமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.  புதிய Nexon EV-இல் ஏற்கனவே காணப்பட்ட பல வடிவமைப்பு குறிப்புகளுடன், 400-500km வரையிலான மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Curvv என்பது ஒரு பெரிய SUV கூபே ஆகும். உட்புறங்களில் அம்சம் நிரம்பியதாக இருக்கும். 

Mahindra Thar 5-door:

பல்வேறு தகவல்கள் மற்றும் வதந்திகளுக்குப் பிறகு, மஹிந்திரா நிறுவனத்தின் 5 கதவுகளை கொண்ட தார் கார் மாடல் 2024ம் ஆண்டு அறிமுகமாக உள்ளது. இது மிகவும் ஆடம்பரமாக இருக்கும் மற்றும் வழக்கமான தார் உடன் ஒப்பிடும்போது வித்தியாசமான ஸ்டைலிங் தீம் மற்றும் சலுகையில் அதிக பிரீமியம் அம்சங்களுடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-கதவு வேரியண்டை விட பெரிய விலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டாலும், 5-கதவு மிகவும் நடைமுறைக்குரியதாகவும், குடும்ப பயணத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்.

Citroen C3X sedan:

Citroen இந்தியாவில் C3X செடானுடன் ஒரு சுவாரஸ்யமான தயாரிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. இது செடான் வடிவத்துடன் கூடிய கிராஸோவர் வேரியண்டாகும். இது ஒரு தீவிர ஸ்டைலிங் தீம் கொண்டிருக்கும், ஆனால் வழக்கமான SUV போன்ற ஆரோக்கியமான அளவிலான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கும். சி3 ஏர்கிராஸைப் போலவே இன்ஜின் ஆப்ஷன் இருக்கும். ஆனால் இன்டீரியர் தற்போதைய சிட்ரோயன் கார்களை விட அதிக பிரீமியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget