Best 5 Seater Cars: கம்மி பட்ஜெட், தரமான 5 சீட்டர் கார்கள் - இந்தியாவின் டாப் 3 மாடல்கள், எது பெஸ்ட்?
Best 5 Seater Cars in India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், சிறந்த 5 சீட்டர் கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Best 5 Seater Cars in India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும், சிறந்த 5 சீட்டர் கார்களின் டாப் 3 பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டுக்கு ஏற்ற 5 சீட்டர் கார்கள்:
இந்திய ஆடோமொபைல் சந்தையில் கார்களுக்கான தேவைதொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடும்பத்துடன் பயணிக்க விரும்பும் மக்களின் குறைந்தபட்ச தேர்வாக 5 இருக்கை கொண்ட வாகனங்களாக உள்ளன. சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட்டில் இந்த பிரிவில் பல சக்திவாய்ந்த கார்கள் கிடைக்கின்றன. இந்திய சந்தையில், இந்த பட்டியலில் டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி மற்றும் மஹிந்திரா கார்கள் உள்ளன. அந்த வகையில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், இந்தியாவில் கிடைக்கும் டாப் 3, 5 சீட்டர் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாடா கர்வ்வ்
டாடா கர்வ்வ் ரூ. 10 லட்சம் வரம்பில் சமீபத்தில் அறிமுகமான கார் மாடலாகும். டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆகிய இரு வகைகளிலும் கிடைக்கிறது. இந்த காரின் எலெக்ட்ரிக் எடிஷனும் சந்தையில் உள்ளது. டாடா கர்வ் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்கும். இந்த கார் 34 வகைகளில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரில் டிஜிட்டல் ஸ்டீயரிங் வீல் உள்ளது. இந்த கார் பல வண்ண மூட் லைட்டிங் அம்சத்துடன் வருகிறது. டாடா காரில் பாதுகாப்பிற்காக ஆறு ஏர்பேக்குகளும் உள்ளன. இது தவிர இந்த காரில் க்ரூஸ் கன்ட்ரோல் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி ஃப்ரான்க்ஸ்
மாருதி சுசூகி ஃப்ரான்க்ஸ் சந்தையில் 10 வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் உட்புறத்தில் டூயல் டோன் தீம் உள்ளது. 360 டிகிரி வியூ கேமரா, வயர்லெஸ் சார்ஜர், ஹெட் அப் டிஸ்பிளே உள்ளது. ஒன்பது அங்குல SmartPlay Pro Plus அமைப்பு உள்ளது. இந்த மாருதி காரில் 1.0 லிட்டர் டர்போ பூஸ்டர் ஜெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, மேம்பட்ட 1.2 லிட்டர் கே சீரிஸ் டூயல் ஜெட் இன்ஜின் ஆப்ஷனும் கிடைக்கிறது. ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பமும் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாருதி ஃபிராங்க்ஸ் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8,37,500ல் தொடங்குகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ:
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, ஒரு நல்ல 5 சீட்டர் காராகும். மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு XUV 3XOவை மட்டும் நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இந்த கார் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் மாதத்தில் இந்த காரின் 10,000 மாடல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரில் ஸ்கைரூஃப் வசதியும் உள்ளது. மஹிந்திரா XUV3XO சந்தையில் 16 வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மஹிந்திரா XUV 3XO எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 7.49 லட்சத்தில் தொடங்குகிறது.