Auto Sales November 2024: நவம்பரில் 4% உயர்ந்த கார் விற்பனை; முதலிடத்தில் எந்த நிறுவனம்?
Auto Sales November 2024 India: நவம்பர் மாத கார் விற்பனை பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
நவம்பர் மாத வாகன விற்பனை பல பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றம் கண்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருது சுசூகி, டாடா மோட்டர்ஸ் ஆகிய நிறுவனர்கள் நவம்பர் மாத கார் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எஸ்.யூ.வி. கார்களுக்கான தேவை அதிகரிப்பு, திருமண சீசன் ஆகிய காரணங்களால் நவம்பர் மாதத்தில் கார் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி இந்தியா:
மாருதி சுசூகி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட இந்தாண்டு 10 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துளது. கடந்தாண்டு 2023 நவம்பரில் 1,64,439 கார்கள் விற்பனையாகிய நிலையில், 2024 நவம்பர் மாதத்தில் 1,81,531 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. Domestic PV விற்பனை எண்ணிக்கை 5% அதிகரித்து 1,34,158 கார்களாக விற்பனை உயர்ந்துள்ளது.
டாடா மோட்டர்ஸ்:
டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார் விற்பனை 2024 நவம்பர் மாதத்தில் சிறிது அதிகரித்துள்ளது. 24,753 கார்கள் விற்பனையாகியுள்ளன. உள்நாட்டு விற்பனை 1 சதவீத, அதிகரித்து 73,246 கார்கள் விற்பனையாகியுள்ளன.
ஹூண்டாயா மோட்டார் இந்தியா:
2024-ம் நவம்பர் மாதத்தில் ஹூண்டாய் மோட்டர் நிறுவனத்தின் கார்கள் விற்பனை 7% குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் 61,252 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது க்2023 நவம்பரில் 65,801 ஆக இருந்தது. உள்நாட்டு விற்பனை 2 சதவீதம் சரிந்து 48,246 ஆக உள்ளது. இந்த நிறுவனத்தின் ஏற்றுமதி 20 % சரிந்துள்ளது.
டோயோட்டா கிரில்ஸ்கோர் மோட்டார்:
டோயோட்டா நிறுவனம் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விற்பனையான 17,818 கார்களை விட 2024 நவம்பர் மாதத்தில் 44 சதவீதம் உயர்ந்து 25,586 ஆக உள்ளது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா:
எம்.ஜி. மோட்டர் நிறுவனத்தின் ஆண்டு வளர்ச்சி 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023- நவம்பரொல் 3,144 கார்கள் விற்பனையான நிலையில், 2024 நவம்பரில் 6,019 காரள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா, கியா, மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் நவம்பர் மாத விற்பனை தகவல் இன்னும் வெளியாகவில்லை. எலக்ட்ரிக் கார் சந்தையை விற்பனை பொறுத்தவரையில் கடந்த 2023 ம் ஆண்டு நவம்பரை இந்தாண்டு 47 சதவீதம் உயர்ந்துள்ளது. நவம்பர் 2024-ல் 11,165 கார்கள் விற்பனையாகியுள்ளன. எம்.ஜி. நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் விற்பனை 2023-நவம்பரில் 956 ஆக இருந்த நிலையில், 2024 நவம்பரில் 3,126 கார்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.