மேலும் அறிய
Advertisement
Rasi Palan Today, Oct 12: விருச்சிகத்துக்கு ஆதரவு: துலாமுக்கு நலம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today, October 12: அக்டோபர் மாதம் 12ஆம் நாள் சனிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 12, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
கனிவான பேச்சுக்கள் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். சுய தொழிலில் லாபகரமான சூழல் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பாராட்டு கிடைக்கும் நாள்.
ரிஷப ராசி
கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வியாபாரப் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். கைமாற்றாக கொடுத்திருந்த பணம் கிடைக்கும். அரசு பணிகளில் அலைச்சல் ஏற்படும். சமூகப் பணிகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். விற்பனை பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். பரிவு வேண்டிய நாள்.
மிதுன ராசி
காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்கள் மூலம் மனதளவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தற்பெருமை இன்றி அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். செல்லப்பிராணிகள் வழியில் விரயங்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
கடக ராசி
மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். எண்ணிய காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் தன்மை அறிந்து நட்பு கொள்ளவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பகை விலகும் நாள்.
சிம்ம ராசி
சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். வாக்குறுதி கொடுக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். விவசாயப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். யோகம் வேண்டிய நாள்.
கன்னி ராசி
மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்கள் மூலம் எதிர்பாராத விரயம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வரவு நிறைந்த நாள்.
துலாம் ராசி
வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வியாபாரப் பணிகளில் வெளியூர் தொடர்பு மூலம் நன்மை உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நலம் நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
எந்த ஒரு செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் உதவியால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மேன்மை நிறைந்த நாள்.
தனுசு ராசி
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த சாதகமற்ற சூழல் படிப்படியாக குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிந்தனை மேம்படும் நாள்.
மகர ராசி
பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் பலரின் ஆதரவுகளையும் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிலும் திருப்தியின்மையான சூழல் உண்டாகும். புதிய செயல்களை மேற்கொள்ளும் பொழுது சிந்தித்துச் செயல்படுவது அவசியம். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துகள் கூறுவதை தவிர்க்கவும். கவனம் வேண்டிய நாள்.
கும்ப ராசி
வங்கி தொடர்பான உதவிகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் நல்ல மாற்றம் உண்டாகும். உபரி வருமானம் குறித்த எண்ணம் மேம்படும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.
மீன ராசி
தாராளமான தனவரவுகள் உண்டாகும். பணியாளர்களுக்கு செல்வ சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபாரப் பணிகளில் பொருளாதார உயர்வு உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion