மேலும் அறிய

Senthil Balaji Case: செந்தில் பாலாஜிக்கு குட்டு வைத்த நீதிமன்றம்; சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மனு தள்ளுபடி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், சிறப்பு நீதிமன்ற விசாரணை முடியும் வரை வழக்கை தள்ளி வைக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற விசாரணை முடியும் வரை, வழக்கை தள்ளி வைக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

செந்தில் பாலாஜி தரப்பு மனு என்ன.?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரான கார்த்திகேயன் என்பவர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உதவியாளர் கார்த்திகேயன் தரப்பில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, எம்பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி உள்ளிடோர் மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அமலாக்கத்துறை எதிர்ப்பு - மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி

இந்நிலையில், அவ்வாறு வழக்கை தள்ளி வைத்தால் விசாரணை பாதிக்கப்படும் என, அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். இது செந்தில் பாலாஜி தரப்பிற்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
எதிர்பார்த்திருக்கும் வேலைவாய்ப்பு... விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்: ரெடியாக இருங்க
எதிர்பார்த்திருக்கும் வேலைவாய்ப்பு... விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்: ரெடியாக இருங்க
Ashta Varahi: அஷ்ட வராஹி சுவாசினி பூஜை - இவ்ளோ பலன்கள் இருக்கா? எப்போது? எப்படி கொண்டாட வேண்டும்?
அஷ்ட வராஹி சுவாசினி பூஜை - இவ்ளோ பலன்கள் இருக்கா? எப்போது? எப்படி கொண்டாட வேண்டும்?
பேராவூரணியில் பரபரப்பின் உச்சம்... காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் போராட்டம்: பின்னணி என்ன?
பேராவூரணியில் பரபரப்பின் உச்சம்... காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் போராட்டம்: பின்னணி என்ன?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget