மேலும் அறிய

Rasipalan: விருச்சிகத்துக்கு உதவி..தனுசுக்கு முயற்சி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?

Today Rasipalan: ஜூன் மாதம் 25ஆம் நாள் செவ்வாய் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 25.06.2024 

கிழமை: செவ்வாய்

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

பிற்பகல் 3.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை

குளிகை:

பகல்12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

சொந்த ஊர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். கற்றல் திறனில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அணுகுமுறையில் சில மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் பிறக்கும். நலம் மேம்படும் நாள்.

ரிஷபம்

சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் சார்ந்த செயல்களால் விரயம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் நாட்டம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். எழுத்து துறைகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். வெளியூர் பயணங்களில் இருந்த தாமதங்கள் விலகும். பாராட்டு நிறைந்த நாள்.

மிதுனம்

மறதியால் செயல்களில் தாமதம் உண்டாகும். பேச்சுகளில் சற்று கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு விமர்சனங்கள் தோன்றி மறையும். சூழ்நிலை அறிந்து பொறுமையுடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.

கடகம்

குடும்பத்தாரின் ஆதரவுகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட வருத்தம் நீங்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் சில தெளிவுகள் உண்டாகும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதளவில் இருந்த கவலைகள் விலகும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.

சிம்மம்

இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். தடையாக இருந்தவர்களின் இன்னல்கள் நீங்கும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். திடீர் தனவரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் கோப்புகள் கையாள்வதில் கவனத்துடன் இருக்க வேண்டும். செலவு நிறைந்த நாள்.

கன்னி

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். திருத்தல பயணங்கள் சென்று வருவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்களில் இருந்த தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் அமையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

துலாம்

அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் குறையும். உறவினர்களின் வருகை உண்டாகும். கடனை அடைப்பதற்கான சிந்தனைகள் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகள் சாதகமான முடிவுகளை தரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். ஆர்வம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

மனதில் இருந்த கவலைகள் விலகும். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தனித்தன்மைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். உதவி கிடைக்கும் நாள்.

தனுசு

தடைப்பட்ட தனவரவுகள் கிடைக்கும். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்களை உருவாக்குவீர்கள். சிக்கலான பணிகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில செய்திகளால் மாற்றம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். முயற்சி மேம்படும் நாள்.

மகரம்

தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன், மனைவிக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பழைய நினைவுகளால் மனதில் குழப்பங்கள் உண்டாகும். மாற்றமான அணுகுமுறையால் நன்மை அடைவீர்கள். செயல்களில் அறிவாற்றல் வெளிப்படும். உறுதி மேம்படும் நாள்.

கும்பம்

பணி நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். நண்பர்களிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகனம் தொடர்பான விரயங்கள் நேரிடலாம். ரகசியமான முதலீடு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். வர்த்தக விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பக்தி நிறைந்த நாள்.

மீனம்

வரவுகளில் இருந்த தடைகள் விலகும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருப்பீர்கள். வீடு மாற்றம் குறித்த செயல்களில் பொறுமை காக்கவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். தடைகள் விலகும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Embed widget