MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்
வெறும் நடிகர் தானே முதல் தேர்தலில் வெறும் ரசிகர் பட்டாளத்தை மட்டும் கொண்டு என்ன செய்து விடுவார் என தவெக தலைவர் விஜய்யை அனைவரும் லேசாக எடைபோட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுகவின் அடிமடியிலேயே கைவைக்க விஜய் மெகா ப்ளான் ஒன்று போட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இந்த ப்ளான் மட்டும் சக்சஸானால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..
தொடக்கத்தில் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நலத்திட்டங்களை செய்து வந்தார் நடிகர் விஜய். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், மாணவர்களுக்கு கல்வி விருதுகள், பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் என நேரில் வழங்கி மக்கள் மத்தியில் அரசியல் தலைவராக தனக்கென ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகிறார் விஜய்..இப்படி பார்த்து பார்த்து காய் நகர்த்தி வரும் விஜய் கட்சி தொடங்கியவுடன் வந்த மக்களவை தேர்தலில் கலந்து கொள்ளாமல் 2026ல் வரும் சட்டமன்ற தேர்தலிலேயே தவெக தேர்தல் களம் காணும் என்றே அறிவித்தார். ஆக பக்கா ப்ளானுடன் தான் விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார் என விமர்சனங்கள் எழத்தொடங்கின.
இந்நிலையில் 2026 தேர்தலில் வெற்றி பெற விஜய் பல்வேறு உத்திகளை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. அதில் மேஜர் ப்ளான் என்னவென்றால் விஜயின் முதல் அட்டாக் திமுக தானாம். அரசியல் கட்சி தொடங்கியது முதலே விஜய் ஆண்டி டிஎம்கே என்ற ஸ்டாண்டை கையில் எடுத்தார்..வாழ்த்து சொல்வதில் திமுகவை ஓரங்கட்டுவது, கள்ளச்சாராய விவகாரத்திற்கு கண்டனம் தெரிவிப்பது என செலக்டிவ் அரசியல் செய்து வருகிறார். நீட் விவகாரத்தில் விஜய் மௌனம் காத்ததும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டே!
இந்நிலையில் 26 தேர்தலில் திமுகவை தாக்க இப்போதே விஜய் அண்டர்க்ரௌண்ட் வேலைகளை ஆரமித்துவிட்டதாக கூறப்படுகிறது..
திமுகவின் மிகப்பெரிய பலமே அதன் கூட்டணி கட்சிகள் தான். கடந்த மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றியை பறைசாற்றிய திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 46.97
இதில் திமுக தனித்து பெற்றது 26.93%அதிமுக கூட்டணி வென்ற வாக்குகள் 23.05 சதவிகிதம் . தனியாக அதிமுக வென்ற வாக்குகள் 20.46 சதவிகிதம்.நாம் தமிழர் தனியாக வென்ற வாக்குகள் 8.20 சதவிகிதம்.
திமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் அவர்களின் கூட்டணி. காங்கிரஸ் 10 சதவிகித வாக்குகள் மற்ற கட்சிகள் 2-5 சதவிகித வாக்குகளை வென்று திமுகவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியது. இந்நிலையில் அதைதான் உடைக்க திட்டமிட்டுள்ளாராம் விஜய்.
ஏற்கனவே விஜய் ரகசியமாக கூட்டணி பேச்சு வார்த்தைகளை தொடங்கிவிட்டதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ், விசிக மற்றும் இடது சாரிகளை விஜய் குறிவைப்பதாக கூறப்படுகிறது. விசிக திமுக கூட்டணியில் இருந்தாலும் திமுக மீது பல விமர்சனங்களை அவ்வப்போது முன்வைக்கும். அதேபோல் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திமுக நிழலில் இல்லாமல் தனித்து அரசியல் செய்ய வேண்டும் என பேசியிருந்தார். மேலும் மதச்சார்பின்மையை விஜய் வலியுறுத்துவதால் இடது சாரிகள் மத்தியிலும் விஜய்க்கு ஒரு சான்ஸ் உண்டு.
விசிகவிடம் அதிமுக ஏற்கனவே கூட்டணி வைக்க முயன்ற போது அதிமுக பாஜக பக்கம் சாயலாம் என்பதால் அவர்களுக்கு விசிக உடன்படவில்லை. ஆனால் விஜய்யை பொறுத்தவரை பாஜக பக்கம் செல்ல வாய்ப்பே இல்லை. எனவே விஜய்க்கு இந்த மூன்று கட்சிகள் மத்தியிலும் வாய்ப்புண்டு என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். விஜய்யின் இந்த ப்ளான் மட்டும் சரியாக அமைந்தால் 2026 தேர்தலில் தவெக முக்கியப்புள்ளியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது