TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!
MGR, NTR வெற்றி பெற்றதை போல் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயால் ஜெயிக்க முடியாமா என்று தனியார் டிவி சர்வே நடத்தியுள்ளது. இந்த சர்வேயில் பாசிட்டிவ்வான பதிலை மக்கள் கொடுத்திருப்பது விஜய் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆக போகிறது. ஆனாலும் விஜய் சினிமாவில் நடித்து வருவதால் முழு நேர அரசியலில் இன்னும் இறங்கவில்லை. 2026 தேர்தலில் முதல்வர் பதவியை அடைந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் விஜய் கள அரசியலுக்கு வரமல் இருப்பது சொந்த கட்சியனருக்கே பிடிக்கவில்லை.
இத்தகைய சூழலில் தான் தனியார் டிவி சார்பில் 2026 சட்டசபை தேர்தலில் விஜயின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பதை அறியும் வகையில் மெகா சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் எம்ஜிஆர், என்டிஆர் போல் விஜய் ஜெயிக்க முடியுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 42 சதவீதம் பேர் ஆம் என்றும், 41 சதவீதம் பேர் இல்லை என்றும் 17 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர். அதாவது தமிழகத்தில் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி முதல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.
அதேபோல் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் நடிகராக இருந்து தெலுங்கு தேசம் கட்சியுடன் என்டிஆரும் முதல் தேர்தலில் ஆட்சியை பிடித்தார்.தற்போது நடிகர் விஜயும் கட்சி தொடங்கி 2026ல் முதல் முறையாக சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறார். இதனால் தான் இந்த கேள்வி என்பது சர்வேயில் கேட்கப்பட்டது. அதற்கு சர்வேயில் பங்கேற்ற 42 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே போல் விஜய்க்கு யார் யாருடைய ஆதரவு எவ்வளவு இருக்கிறது என்ற சர்வேவும் எடுக்கப்பட்டுள்ளது. அதில், 7 சதவீதம் விவசாயிகள் ஆதரவும், 10 சதவீதம் அரசு ஊழியர்கள், 12 சதவீதம் தனியார் ஊழியர்கள், முதன் முறை வாக்காளர்கள் 45 சதவீதம், இல்லத்தரசிகள் 6 சதவீதம்,முதியவர்கள் 2 சதவீதமும் ஆதரவு அளித்துள்ளனர். அதேபோல் இளைய தலைமுறையினர் வாக்கு விஜய்க்கு கிடைக்கும் என்று 60 சதவீதம் பேர் கூறியுள்ளது தவெக தொண்டர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.