மேலும் அறிய
தமிழகத்தில் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் 25 கி.மீ. ரோடு ஷோ.. தொடங்கியது
ரோடுஷோவில் ஏராளமான பொதுமக்களை முன்னிறுத்த மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் மக்களை அழைத்து வரப்பட்டனர்.

முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ
Source : twitter
மதுரை மாநகராட்சியின் முதல் மேயருமான முத்து சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார்.
மதுரையில் தமிழக முதல்வர் ரோடு ஷோ
மதுரை தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று 1 மணிக்கு விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்த நிலையில். விமான நிலையத்தில் தி.மு.க., சார்பில் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் முதல்வர் அவனியாபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்தார். வெயில் குறைந்த பின்னர் மாலையில் 25 கிமீ தூரத்திற்கு நடக்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றார். மாலையில் 5:00 மணிக்கு அவனியாபுரத்திலிருந்து தனது ரோடு ஷோவை துவங்கிய முதல்வர், ஜீவா நகர், ஜெய்ஹிந்த்புரம் வழியாக பழங்காநத்தம் பகுதியை சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து பைபாஸ் ரோடு வழியாக காளவாசல், குரு தியேட்டர் பகுதிக்கு வந்து அங்கிருந்து புதுஜெயில் ரோடு, மதுரா கோட்ஸ் வழியாக ரோடு ஷோ செல்கிறார்.
தி.மு.க., தொண்டர்கள் பங்கேற்பு
அப்போது புது ஜெயில் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திமுகவின் மூத்த தலைவர்கள் ஒருவரும் மதுரை மாநகராட்சியின் முதல் மேயருமான முத்து சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார். முதல்வரின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்றனர். முதல்வரின் ரோடு ஷோ திருப்பரங்குன்றம், மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய 3 தொகுதிகளை இணைக்கும் வகையில் நடைபெறுவது குறிப்பிடதக்கது.
முதல்வர் ரோடு ஷோ நிகழ்ச்சி - வரவேற்க லாரிகள் மூலம் அழைத்து வரும் மக்கள்
மதுரை மாநகர் மாவட்டம், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞரணி என திமுகவை சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு பகுதிகளில் நின்று வரவேற்க உள்ளனர். இதனால் ரோடுஷோவில் ஏராளமான பொதுமக்களை முன்னிறுத்த மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் மக்களை அழைத்து வரப்பட்டனர்.
கையில் லிஸ்டுன் தி.மு.க நிர்வாகிகள்
முதலமைச்சர் ரோட்- ஷோவிற்கு தலைக்கு 200 ரூபாய் கொடுத்தும் அழைத்துவரப்பட்ட பெண்கள், கையில் பெயர் லிஸ்டுடன் சுற்றி திரிந்த திமுகவினர். ஒருபக்கம் கையில் பலூன்களை கொடுத்து ஏமாற்றி குழந்தைகள், சிறுவர்களை ரோட் ஷோவிற்கு அழைத்துவந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் பலூனுக்காக திமுகவினருடன் பெண்கள் வாக்குவாதம் செய்தனர். ரோட் ஷோவிற்கு வந்த பெண்களை மண்டபத்திற்குள் அடைத்து பெயர் அடிப்படையில் பணம் கொடுத்து வரிசையில் காத்திருக்க வைத்திருந்ததும் தெரியவந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















