Namakkal DMK Fight | ’’டேய்..நீ யார்ரா‘’ திமுக நிர்வாகிகள் கடும் மோதல் சமாதானப்படுத்திய அமைச்சர்
நாமக்கல்லில் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் ஆபாச வார்த்தைகளில் ஒருவரையொருவர் வசைபாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கூனாவேலம்பட்டி, குறுக்குபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். அப்போது குறுக்குபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 26 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வின்போது குறுக்குபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் தனக்கு முறையாக அழைப்பு அளிக்கவில்லை என கூறி நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தனித்து நின்றார்.
இதையடுத்து அமைச்சர் மதிவேந்தன் நிகழ்வில் கலந்துகொள்ளுமாஏஉ அழைத்த போது அமைச்சர் மதிவேந்தனிடம் நான் ஏன் வரவேண்டும் நீங்களே நில்லுங்கள் என காட்டமாக கூறினார். இதையடுத்து கட்சி நிர்வாகி பாலு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் மாறி மாறி தகாத வார்த்தைகளில் திட்டிக்கொண்டனர்.மேலும் ஒருவரை ஒருவர் தாக்க முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் அமைச்சர் மதிவேந்தன் இருவரையும் சமாதானப்படுத்தி பூமி பூஜை செய்து அங்கு இருந்து புறப்பட்டார்.
அமைச்சர் முன்னிலையிலேயே கட்சி நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.